தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ராஜினாமா எம்எல்ஏ-க்கள் போட்டியிடத் தடையில்லை!

24 Sept 2026, 9:42 pm
ராஜினாமா எம்எல்ஏ-க்கள் போட்டியிடத் தடையில்லை!

ராஜினாமா எம்எல்ஏ-க்கள் போட்டியிடத் தடையில்லை!

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, செப். 24 -பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் தேர்தலில் போட்டி யிடுவதற்கு தடை விதிக்கக் கோரி,தொடரப்பட்டிருந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சைதாப்பேட்டையைச் சேர்ந்த கே. சுதன் என்ற வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன், ஒரு கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பிறகு அதிலிருந்து விலகி வேறு கட்சியில் சேர்ந்து போட்டியிடுவது கட்சித்தாவல் தடை சட்டத்தில்இருந்து தப்பிக்கும் முயற்சியே ஆகும்என தெரிவித்தார்.

எனவே, இவர்கள் 5 ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாதபடி சட்டத் திருத்தம்கொண்டுவர வேண்டும்; அரசியல் லாபத்திற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடும் நபர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்யும்போதுதேர்தல் செலவை முன்கூட்டியே டெபாசிட் செய்யும் வகையில் நடைமுறை வகுக்கப்பட வேண்டும் என்றும்வலியுறுத்தினார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜனநாயக முறைப்படி ராஜினாமா செய்த உறுப்பினர்,மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க சட்டத்தில் இடமில்லை என தெரிவித்தார்.அனைத்துத் தரப்பு வாதங்களை யும் கேட்ட தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, இவ்வழக்கில் வியாழனன்று தீர்ப்பளித்தது.அப்போது, ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கும்வகையில் எந்த சட்டமும் இதுவரை இல்லை. எந்தச் சட்டமும் இல்லாத நிலையில், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கமுடியாது. தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட முடியாது. சட்டம் இயற்றுவது நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றஉறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.