தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

11 Aug 2026, 11:00 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிறப்பு நீதிமன்றம் தொடர்பானபொது நல வழக்கு தள்ளுபடி

சென்னை: மதுரை தவெக எம்.எல்.ஏ. கார்த்திகேயனுக்கு எதிரான வழக்கைச் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய பொதுநல மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது, மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகள் குறித்த விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டதும், அவைஅனைத்தும் சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்படும் என தெரிவித்த நீதிபதிகள், போதிய அவகாசம் அளிக்காமல் ஆதாரமின்றித் தொடரப்பட்ட இந்த மனுவில் எந்தப் பொதுநலனும் இல்லை எனக் குறிப்பிட்டு தள்ளுபடி செய்தனர். எதிர்காலத்தில் இதுபோன்று வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

திமுக எம்எல்ஏ மீது வழக்கு?பாஜக பிரமுகரின்மனு தள்ளுபடி!

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிரதமர் மோடி தான் காரணம் என விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், கடந்த 2023-ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசியதுதொடர்பாக, அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பார்த்திபன் என்ற பாஜக பிரமுகர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என மனுதாரருக்கு அனுமதியளித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சாதிப் பெயரில் தெருக்கள்:நீதிமன்றம் கவலை

சென்னை: தெருக்கள், சாலைகளில் உள்ள சாதிப் பெயர்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. 1978-ஆம் ஆண்டே இது தொடர்பான அரசாணை இருந்தும் இன்னும்

நடைமுறை ப்படுத்தப்படாதது குறித்து நீதிபதி என். ரமேஷ் கவலை தெரிவித்தார்.

பழனியில் ரூ. 150 கோடி கோவில் நிலத்தை அபகரித்த பாஜகவினர்?

அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு

மதுரை: பழனி மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள, கவுமார மடத்திற்குச் (பட்டணம் மடம்) சொந்தமான ரூ. 150 கோடி மதிப்பிலான 1.77 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.திண்டுக்கல் பூலாம்பட்டியைச் சேர்ந்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி தாக்கல் செய்த மனுவில், முன்னாள் பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜின் மனைவி கலாராணி, உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த அம்பிகா உள்ளிட்டோர் இந்நிலத்தை ஆக்கிரமித்து, கட்டடங்கள் கட்டி வாடகை மூலம் வருவாய்ஈட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தைப் பாதுகாக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், இடத்தை நேரில் ஆய்வு செய்து நிலத்தின் உரிமை மற்றும் ஆக்கிரமிப்பு குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.