தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காவலர்களின் பணிச்சுமை குறித்து வழக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

3 Jun 2026, 10:05 pm
காவலர்களின் பணிச்சுமை குறித்து வழக்கு தமிழக அரசு பதிலளிக்க  உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
<p><strong>காவலர்களின் பணிச்சுமை குறித்து வழக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு</strong></p><p>மதுரை, ஜூன் 3- தமிழக காவல்துறையின ரின் பணிச்சுமை, பணிநேரம் மற்றும் நலன்கள் தொடர் பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக தலை மைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) ஆகி யோர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. காவலர் குடும்ப நல அறக்கட்டளையின் தலை வர் சத்யபிரியா தாக்கல் செய்த மனுவில், தமிழக காவல்துறையில் அதிக பணிச்சுமை நிலவுவதாக வும், காவலர்கள் நீண்ட நேரம் ஓய்வின்றி பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளதாக வும் தெரிவித்திருந்தார். மேலும், 2010 முதல் 2025 வரையிலான காலகட்டத் தில் பட்டாலியன் காவல் துறையினருக்காக ஒதுக்கப் பட்ட நிதி மற்றும் அவர்களின் செயல்பாடுகள் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபு ணர் குழு அமைத்து ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். அத்துடன், பட்டாலியன் காவலர்களை சட்டம்-ஒழுங்கு காவல்துறையுடன் ஒருங்கிணைத்து பயன் படுத்துவது குறித்து பரிசீ லிக்கவும், காவல்துறையின ருக்கு எட்டு மணி நேர பணி முறையை நடைமுறைப் படுத்தவும், பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அறிமுகப்படுத்தவும் உத்தர விட வேண்டும் என்றும் மனு தாரர் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காவல்துறையின் சேவையின் முக்கியத்து வத்தை சுட்டிக்காட்டும் வகை யில், “ஒரு நாள் காவலர்கள் பணியில் இல்லாவிட்டால் என்ன ஆகும்? போக்கு வரத்து நெரிசல் இல்லா மல் நீங்கள் எப்படி நீதி மன்றத்திற்கு வருவீர்கள்?” என்று கருத்து தெரிவித்த னர். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக தமிழக தலை மைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஒத்திவைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.