தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புயலில் சிக்கிக்கொள்ளும் மீனவர்களை காப்பாற்ற வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளதா? உயர்நீதிமன்றம் கேட்கிறது

2 hours before
புயலில் சிக்கிக்கொள்ளும் மீனவர்களை காப்பாற்ற வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளதா? உயர்நீதிமன்றம் கேட்கிறது

புயலில் சிக்கிக்கொள்ளும் மீனவர்களை காப்பாற்ற வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளதா?

உயர்நீதிமன்றம் கேட்கிறது

சென்னை, நவ.10-நடுக்கடலில் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் சிக்கிக் கொள்ளும் மீனவர்க ளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தேடுதல் மற்றும் மீட்பு நட வடிக்கை மேற்கொள்வதில் மத்திய நிறுவனங்கள் பின்பற்றும் நிலையான வழிகாட்டு நெறி முறைகளின் விவரங்களைச் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் முகமைகள் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுத்திருந்தால், பல உயி ரிழப்புகளைத் தடுத்திருக்க முடியும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா மற்றும் பி. கார்த்திகேயன் அடங்கிய அமர்வு, சென்னை மாதவரத்தைச் சேர்ந்த கே. கோபால் என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்தபோது இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மனுதாரரின் 17 வயது மகன், கடந்த 2026 ஜூலை 5 அன்று தன் நண்பர்க

ளுடன் மெரினா கடற்கரைக்குச் சென்ற போது கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டார். நண்பர்கள் மீட்கப்பட்ட நிலையில், மகனைக் கண்டுபிடிக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக்கூறி தந்தை நீதிமன்றத்தை அணு கினார்.

இவ்வழக்கின் விசாரணை முக்கியத்து வம் பெறக் காரணம், இம்மாதத் தொடக்கத்தில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சென்ற 9 மீனவர்கள் ஆந்திரக் கடற்கரை அருகே 'முரசு' சூறாவளிப் புயலில் சிக்கி உயிரிழந்த சம்பவமே ஆகும். மீட்புக் குழுக்கள் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறியதே இதற்கு காரணம் எனக் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் மீனவச் சமூகத்தினரும் குற்றம்சாட்டியிருந்தனர்.

சென்னை பெருநகரக் காவல் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த

அறிக்கையில், தேடுதல் பணிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறை உள்ள தாகவும், கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மற்றும் மாநில அமைப்புகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரு வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அந்த அறிக்கையைப் பரிசீலித்த நீதிபதிகள், "பல்வேறு அமைப்புகள் எவ்வாறு தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பது குறித்த விவரங்கள் அதில் தெளிவாக இல்லை. 2022-இல் தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புத் திட்டம் கொண்டு வரப்பட்ட போதிலும், ஒன்றிய - மாநில அமைப்புகளிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் பல உயிர்கள் பலியாகிவிட்டன" என வேதனை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை தாமாக முன்வந்து 5வது எதிர்மனுதாரராக நீதிமன்றம் சேர்த்துள்ளது. மேலும், கடலில் சிக்குபவர்களை மீட்க பின்பற்றப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களைப் பெற்றுத் தருமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.