‘மதம் மாற்றும்’ அமைப்புகளுக்கு எப்சிஆர்ஏ பதிவு தரக் கூடாது! நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு உத்தரவு
8 Oct 2026, 10:57 pm

‘மதம் மாற்றும்’ அமைப்புகளுக்கு எப்சிஆர்ஏ பதிவு தரக் கூடாது! நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு உத்தரவு

மதுரை, அக். 8 -ஒரு மதத்தைச் சேர்ந்த மக்களை மற்றொரு மதத்திற்கு மாற்றும் செயல்களில் ஈடுபடும் அமைப்புகளை, “வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச்சட்டத்தின் (FCRA) கீழ் பதிவு செய்ய முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது.

மாண்டிசோரி பள்ளியின் கான்சியோன் பொது அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில்,“வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA), 2010-இன் கீழ் மனு

தாருக்கு ஒரு பதிவுச் சான்றிதழை வழங்கவேண்டும் என மனு தாக்கல் செய்திருந் தோம். ஆனால், மறுத்துவிட்டனர். எனவே, உத்தரவு தொடர்பான ஆவணங்களை வரவழைத்து, அதனை ரத்து செய்து, வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் மனுதாருக்கு சான்றிதழை வழங்கஉத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், எம்.டி. சுமதி அமர்வில் புதனன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்தச் சட்டத்தின் முழு நோக்கமும், வெளிநாட்டுப் பங்களிப்பைப் பெறுபவர்கள், நமக்கு வழங்கிய இறையாண்மை கொண்ட குடியரசின் விழுமியங்களுக்கு முரணான வகையில் செயல்படக்கூடாது என்பதே ஆகும்.பெரிய நாடுகள் அல்லது அவற்றின் அமைப்புகள் பிற நாடுகளின் வர்களுக்கு நேரடியாக வழங்கும் நிதியுதவிகடந்த காலங்களில் ஏற்கெனவே இருந்தஅரசாங்கங்களைக் கவிழ்த்து புதிய வர்களை ஆட்சியில் அமர்த்தியதைப் போலஆபத்தாக அமையலாம். இத்தகைய சூழல்களைக் கையாள்வதற்குத் தேவையான அதிகாரங்களை எப்சிஆர்ஏசட்டம் ஒன்றிய அரசுக்கு அளிக்கிறது.

நாட்டின் மதச்சார்பற்ற தன்மை மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்காத செயல்பாடுகளைக் கொண்ட மத அமைப்புகள் எப்சிஆர்ஏ சட்டத்தின் பதிவுபெறத் தகுதியுடையவை. அதேநேரத்தில் ஒரு மத நம்பிக்கையிலிருந்து மற்றொரு மத நம்பிக்கைக்கு மக்களை மதம் மாற்றும்நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பு களுக்கு எப்சிஆர்ஏ பதிவு மறுக்கப்பட வேண்டும்.

மனுதாரர் அறக்கட்டளை விண்ணப்ப த்தில் அதன் தன்மையை ‘மதம் சார்ந்தது’ என்று சரியாகக் குறிப்பிடாததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த உரிமையியல் மேல்முறையீட்டில் ஆட்சேபிக்கப்பட்ட உத்தரவு நிலைநிறுத்தப்படு கிறது. இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளனர்.