இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து மிகப்பெரும் பின்னடைவு
29 Jun 2026, 11:01 pm
<p><strong>இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து மிகப்பெரும் பின்னடைவு </strong></p><p>சென்னை, ஜூன் 29 - “இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்த ப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்திருப்பது, சமூக நீதிப் போரில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பின்னடைவாகும். இந்த வழக்கில் தவெக அரசு காட்டிய மெத்தனப்போக்கை பார்க்கும்போது, இது மறைமுகமாக பாஜகவின் ‘மதமாற்ற தடைச் சட்ட’ அஜெண்டாவுக்குத் துணைபோகிறதோ என்று பலமான சந்தேகம் எழுகிறது” என திமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அ. சுபேர்கான் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் திமுக உறுதியாகப் போராடும் என்றும் சுபேர்கான் தெரிவித்துள்ளார்.</p>
