முந்தய பக்கம்

மத்தியப் பிரதேசம்: கோர விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 16 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

30 Apr 2026, 1:19 pm
மத்தியப் பிரதேசம்: கோர விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 16 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
<p>மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் நேற்றிரவு (ஏப். 29) நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், 5 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>இந்தூர் - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில், 45-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பிக்-அப் வாகனம், எதிர்பாராத விதமாக டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பைத் தாண்டி எதிரே வந்த கார் (SUV) மீது மோதி கவிழ்ந்தது.</p><p>சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோரில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் சிகிச்சைக்காக இந்தூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>விபத்து குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பிய போது நேரிட்ட இந்தச் சோகம், அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram