மத்தியப் பிரதேசத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 8 குழந்தைகள் பலி ஊடக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் போபால்
18 Aug 2026, 8:20 pm

மத்தியப் பிரதேசத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 8 குழந்தைகள் பலி ஊடக ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

போபால்

பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலம்பாலகாட் மாவட்டத்தில் உள்ளது பிர்சா. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்தப் பிர்சா பகுதிக்கு அருகிலுள்ள 3 கிராமங்களில் (குந்தேகஷா, பொன்சாரி, கொர்கா) கடந்தஜூன் மாதத்திலிருந்து 8 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.மாவட்ட அதிகாரிகள் இந்த இறப்புகளுக்கு மலேரியா, தட்டம்மை போன்ற பருவகால நோய்கள்தான் காரணம் என்று கூறினாலும், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவே குழந்தைகள் உயிரிழந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“3 கிராமங்களிலும் 28 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஜூலை மாதத்தில் எடைபோடப்பட்ட 6 வயதுக்குட்பட்ட 1,149 குழந்தைகளில், 213குழந்தைகள் மிதமான எடைக்குறைவுடனும், 18 குழந்தைகள் கடுமையானஎடைக்குறைவுடனும் காணப்பட்டன. அதாவது ஒவ்வொரு 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு எடை குறைவாக இருந்தது. இந்த ஊட்டச்சத்துக்குறைபாட்டால் ஜூலை மாதத்தில் மட்டும் 169 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 125 குழந்தைகள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ெய்யப்பட்டுள்ளன. 44 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன என அதில் கூறப்பட்டுள்ளது.