‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கு சிறை பாஜக ஆளும் ம.பி.,யில் புதிய சட்டமாம்!
15 Jul 2026, 9:03 pm

‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கு சிறை பாஜக ஆளும் ம.பி.,யில் புதிய சட்டமாம்!

பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருமணம், விவாக ரத்து, சொத்துரிமை உள்ளிட்ட குடும்ப விவகாரங்களை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில் பொது சிவில் சட்டத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு, தனது இறுதி வரைவு அறிக்கையை அம்மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த வரைவு அறிக்கையில், “திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் (லிவ்-இன்) ஜோடிகள் தங்களின் வசிப்பிடத்திற்கு உட்பட்ட மாவட்டப் பதி வாளரிடம் தங்களது உறவைக் கட்டாய மாகப் பதிவு செய்ய வேண்டும்” என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், “லிவ்-இன் உறவு முடிவுக்கு வந்தாலும் அதைப் பதிவு செய்து ரத்து செய்ய வேண்டும். உறவைப் பதிவு செய்யத் தவறினால் 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

லிவ்-இன் உறவில் இருக்கும் ஜோடிகளின் விவரங்களை உள்ளூர் காவல்துறை பராமரிக்க வேண்டும். நில உரிமையா ளர்களோ அல்லது அண்டை வீட்டினரோ பதிவு செய்யப்படாத உறவுகள் குறித்து புகார் அளிக்கலாம்.

லிவ்-இன் ஜோடிக ளின் உறவு குறித்து அவர்களின் பெற்றோ ருக்குத் தெரிவிக்கப்படும். மேலும், பிரி வின்போது பெண் துணைக்கு ஆண் பரா மரிப்புத் தொகை வழங்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 19ஆம் தேதி சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, 20ஆம் தேதி தொடங்க வுள்ள சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.