முந்தய பக்கம்

ம.பி: கள்ளச்சாராய உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு - 14 பேர் கைது

3 hours before
ம.பி: கள்ளச்சாராய உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு - 14 பேர் கைது

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தின் சாகர் மாவட்டம் பந்தா வட்டத்தில் உள்ள 2 கிராமங்களில் கடந்த 5-ஆம் தேதியன்று கள்ளச்சாராயம் குடித்த பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிலருக்கு பார்வை இழப்பு, தலைச்சுற்றல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இது தொடர்பாக 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 16 பேரை தேடின் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளச்சாராயம் அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்திலிருந்து சாகருக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 3 கலால் துறை அதிகாரிகள் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram