மத்தியப் பிரதேச கல்வித்துறையில் பெரும் ்ஊழல்
18 Jul 2026, 8:51 pm
<p><strong>மத்தியப் பிரதேச கல்வித்துறையில் பெரும் ்ஊழல்</strong></p><p>போபால் மத்தியப் பிரதேசம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மிக அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவு கின்றது. மேலும் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி யில் பெரும் ஊழல் முறை கேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2025 சிஏஜி அறிக்கையின் அடிப்படையில், இந்தூரைச் சேர்ந்த சௌரப் திரிபாதி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், மாநில அரசு மற்றும் பள்ளி கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனுதாரரின் தகவல்படி, ஆண்டுதோறும் 7,000 கோடி ரூபாய்க்கும் மேல் பள்ளி கல்விக்காக பட்ஜெட் ஒதுக்கப்பட்டும், மாநிலத்தில் உள்ள 1,895 அரசுப் பள்ளிகளில் ஒரு ஆசிரி யர் கூட பணியமர்த்தப்பட வில்லை என்பது தெரிய வந்துள்ளது. சிஏஜி அறிக்கையின்படி, 435 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்பட வில்லை. அதேசமயம், 85 பள்ளிகளில் அங்கீக ரிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத போதிலும், 128 ஆசிரியர்கள் அங்கு தொடர்ந்து ஊதியம் பெற்று வருகின்றனர். மேலும், ஆசிரியர் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட 7,165.09 கோடி ரூபாயில், ஐந்து ஆண்டுகளில் வெறும் 35.71 கோடி ரூபாய் மட்டுமே, அதாவது சுமார் 0.5% நிதி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. ஆசிரியர் கிடைப்பதில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையே பெரும் ஏற்றத்தாழ்வு இருப்பதை அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் அனு மதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் 28.32 சத விகித இடங்கள் காலியாக உள்ளன. அதேசமயம் நகர்ப்புறங்களில் இந்த பற்றாக்குறை 3.46 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. இந்த ஆசிரியர் பற்றாக்குறையினால் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் சரிந்துள்ளதாகவும், 2018-19 கல்வியாண்டில் 67.74 சதவிகிதமாக இருந்த உயர்நிலைப் பள்ளி தேர்ச்சி விகிதம், 2021-22 இல் 38.53 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த விவகா ரத்தை பொறுப்பு தலைமை நீதிபதி விவேக் ருசியா மற்றும் நீதிபதி பிரதீப் மிட்டல் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், கல்வி நிதியைச் சரியாகப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ள நிலையில், மாநில அரசும் பள்ளி கல்வித்துறையும் இது குறித்துப் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
