முந்தய பக்கம்

மத்தியப் பிரதேச படகு விபத்து: தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

2 May 2026, 5:47 pm
மத்தியப் பிரதேச படகு விபத்து: தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே நிகழ்ந்த படகு விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பார்கி அணை பகுதியில் 40 பயணிகளை ஏற்றி சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் மத்தியப் பிரதேச திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த காமராஜ் (38), அவரது மனைவி கார்குழலி (38), இளைய மகன் தமிழ்வேந்தன் (5), திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த அவரது உறவினர் சவுபாக்கியவதி மற்றும் அவர் மகள் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram