திறப்பு விழா முடிந்தும் ‘பூட்டியே’ கிடக்கும் மதுராந்தகம் பேருந்து நிலையம்
6 Mar 2026, 3:17 pm
<p><strong>திறப்பு விழா முடிந்தும் ‘பூட்டியே’ கிடக்கும் மதுராந்தகம் பேருந்து நிலையம்</strong></p>
<p>மதுராந்தகம், மார்ச் 6- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்த கத்தில் தமிழக முதல்வரால் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைக்கப் பட்ட புதிய பேருந்து நிலையம், இன்னும் பயன்பாட்டுக்கு வராதது பொதுமக்க ளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திட்டத்தின் பின்னணி மதுராந்தகம் நகரின் மையப் பகுதியில் நிலவி வந்த போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கவும், கடந்த 2023-ம் ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலை யம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. சுமார் 3.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 51 வணிகக் கடைகள் மற்றும் 50 பேருந்து கள் வந்து செல்லும் வகையில் பிரம் மாண்டமான வணிக வளாகத்துடன் கூடிய கட்டுமானப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 2025-26ம் ஆண்டுக்கான மூலதன மானிய நிதி மற்றும் பராமரிப்பு நிதியிலிருந்து கூடுத லாக ரூ.99 லட்சம் ஒதுக்கீடு செய்ய ப்பட்டது. இந்தப் பணத்தின் மூலம் நக ராட்சி உணவகம், இருசக்கர வாகன நிறுத்துமிடம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. ஏமாற்றத்தில் பயணிகள் கட்டுமானப் பணிகள் முழுமைய டைந்ததைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 4-ம் தேதி தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக இந்தப் புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார். முதலமைச்சர் திறந்து வைத்த செய்தி ஊடகங்களிலும், சமூக வலைதளங் களிலும் வேகமாகப் பரவியது. இதைக் கண்ட மதுராந்தகம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள், மகிழ்ச்சியு டன் புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்றனர். ஆனால், அங்கு பேருந்து கள் இயங்காததைக் கண்டு அதிர்ச்சி யடைந்த பயணிகள், ஏமாற்றத்துடன் பழைய பேருந்து நிறுத்தங்களுக்கே மீண்டும் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் கோரிக்கை தற்போது வெயில் காலம் தொடங்கி விட்ட நிலையில், புதிய பேருந்து நிலை யத்தில் முறையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் நிழற்குடை களை முழுமையாகச் செயல்பாட் டுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்ற னர். நகராட்சி ஆணையர் விளக்கம் இதுகுறித்து மதுராந்தகம் நகராட்சி ஆணையர் சுரேந்திரன் கூறுகையில்: “பேருந்து நிலையத்தில் தரைதளம் அமைக்கும் பணிகள் தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளன. அந்தப் பணி கள் முழுமையாகக் காய்ந்த பிறகே கனரக வாகனங்களான பேருந்து களை உள்ளே அனுமதிக்க முடியும். இதனால் பயன்பாட்டுக்கு வருவதில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் அனைத்துப் பணி களும் முடிக்கப்பட்டு, பேருந்து நிலை யம் முழுமையாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும்,” எனத் தெரி வித்தார். அதிகாரிகளின் வாக்குறுதிப்படி இன்னும் இரு தினங்களில் மதுராந்த கம் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். - க.பார்த்திபன்</p>
