முந்தய பக்கம்

மாதவரம் ரவுண்டானா அருகே சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு

24 Jun 2026, 1:49 am
மாதவரம் ரவுண்டானா அருகே சாலையோர கடைகளை  அகற்ற எதிர்ப்பு
<p><strong>மாதவரம் ரவுண்டானா அருகே சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு</strong></p><p>சென்னை, ஜூன் 23- மாதவரம் ரவுண்டானா அருகே சாலை யோர கடைகளை அப்புறப் படுத்தக் கூடாது என சென்னை மாவட்ட சாலை யோர சிறுகடை விற்பனை யாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் டி.வெங்கட் தலைமையில் நிர்வாகி கள் மண்டலம் 3 செயற்பொறி யாளர் சிவப்பிரகாசத்திடம் அளித்த மனுவில், மண்ட லம் 3க்கு உட்பட்ட 30ஆவது வார்டு மாதவரம் ஜிஎன்டி சாலை ரவுண்டானா அருகில் சாலையோரம் வியாபாரம் செய்யும் சிறுகடை விற்பனை யாளர்களிடம் கடைகளை அப்புறப்படுத்தச் சொல்லி மாநகராட்சி நிர்வாகத்தால் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இங்கு வியாபாரம் செய்ய முறையாக இடம் ஒதுக்கீடு செய்யாத நிலையில் அப்புறப்படுத்து வது முறையல்ல. எனவே இங்கு இடம் ஒதுக்கும் வரை கடைகளை அப்புறப்படுத்தக் கூடாது என்றும், தாங்கள் தலை யிட்டு உடனடியாக இடம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram