தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பள்ளி மாணவர்களை சூழும் குப்பைக்கிடங்கு புகை! குப்பைக்கிடங்கை உடனடியாக மாற்ற மக்கள் கோரிக்கை

4 Nov 2026, 12:01 am
பள்ளி மாணவர்களை சூழும் குப்பைக்கிடங்கு புகை! குப்பைக்கிடங்கை உடனடியாக மாற்ற மக்கள் கோரிக்கை

பள்ளி மாணவர்களை சூழும் குப்பைக்கிடங்கு புகை! குப்பைக்கிடங்கை உடனடியாக மாற்ற மக்கள் கோரிக்கை

உடுமலை, நவ.3-மடத்துக்குளம் அருகே அரசுப்பள்ளி அருகேஉள்ள குப்பைக்கிடங்கிலிருந்து எழும் புகையால்,மாணவர்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், உடனடியாக குப்பைக்கிடங்கை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், சங்கராமநல்லூர் பேரூராட்சி அலுவலகம் அருகேஅரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் அருகிலேயே பேரூராட்சியின் குப்பைக்கிடங்கும் செயல்பட்டு வருகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுதால், வெளியேறும் புகை பள்ளி வளாகத்தை சூழ்ந்து, மாணவர்களின் உடல்நலனுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பள்ளி வளாகத்திற்குள்புகைபரவுவதால் மாணவர்கள் மாசடைந்த காற்றை சுவாசிக்க வேண்டிய அவலநிலைஏற்பட்டுள்ளது. குப்பைகளை எரிப்பதால் வெளியாகும் நச்சுப்புகை குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப்பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். கல்வி கற்க வேண்டிய பள்ளிச்சூழல் புகைமண்டலமாக மாறுவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய அரசு நிர்வாகம், பள்ளிக்கு அருகிலேயே குப்பைகளை கொட்டி எரிப்பதை அனுமதிப்பது ஏன்? என்றகேள்வியும் எழுந்துள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியர், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மற்றும் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, குப்பைகளுக்கு தீவைத்து எரிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும். பள்ளிக்கு அருகிலுள்ள குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றுவதுடன், குப்பைகளை அறிவியல் பூர்வமான முறையில் அகற்றஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 200-க்கும்மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தையும் உடல்நலனையும் கருத்தில் கொண்டு, அரசு நிர்வாகம் இனியும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்குமா? என்பதே பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.