முந்தய பக்கம்

தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்!

6 Jul 2026, 10:16 pm
தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்!
<p><strong>தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்!</strong></p><p>உடுமலை, ஜூலை 6- மடத்துக்குளம் பேரூ ராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் களைப் பேரூராட்சி நிர்வா கம் மரியாதை குறைவாக நடத்துவதைக் கண்டித் தும், அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரியும், திங்களன்று மடத்துக்குளம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிசாமி தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலுகா செயலாளர் வடிவேல், சிஐடியு கட்டுமான சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதனைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் ரங்கராஜ் கண்டன உரையாற்றி, தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும், பேரூராட்சி நிர்வாகத் தின் அலட்சியப் போக்கையும் விளக்கிப் பேசி னார். நிறைவாக, வேலுசாமி நன்றி கூறினார். இப்போராட்டத்தில் திரளான தூய்மைப் பணி யாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பி னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram