மடத்துக்குளம்–கணியூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்: சாலை விரிவாக்கம் செய்ய கோரிக்கை!
2 hours before
<p><strong>மடத்துக்குளம்–கணியூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்: சாலை விரிவாக்கம் செய்ய கோரிக்கை!</strong></p><p>உடுமலை, அக்.5- மடத்துக்குளம்–தாராபுரம் சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நெரிசலை கட்டுப்படுத்த மடத்துக்குளம் முதல் கணியூர் வரை சாலையை உடனடியாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை சாலை மற்றும் பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இச்சாலை இருப்பதால், இங்கு நாள்தோறும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகளவில் காணப்படுகிறது. மேலும் மடத்துக்குளம் அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம் போன்ற முக்கிய அரசு அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் செல்ல இச்சாலையே பிரதானமாக உள்ளது. இதனால் காலை, மாலை வேளைகளில் ஏற்படும் கடும் நெரிசலால் நோயாளிகள், மாணவர்கள் மற்றும் முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.</p><p>சாலையின் இருமருங்கிலும் உள்ள ஆக்கிரமிப்புகளால், சாலையின் முழு அகலத்தையும் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. எனவே, மடத்துக்குளம்–கணியூர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றும், சீரான போக்குவரத்து மேலாண்மை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.</p>
