தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மடத்துக்குளம் திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் உறுதி

11 Apr 2026, 5:30 am
மடத்துக்குளம் திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் உறுதி

மடத்துக்குளம் திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் உறுதி

உடுமலை, ஏப். 10- மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் வெள்ளியன்று சங்கராமநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட மயிலாபுரம், மடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் வாக்கு சேகரித்து பேசுகையில், கடந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் மட்டும் 100 நாள் வேலைத் திட்டம் அமலில் உள்ளது. மீதமுள்ள தளி, சங்கராமநல்லூர், மடத்துக்குளம், கணியூர் ஆகிய நான்கு பேரூராட்சிகளிலும் இத்திட்டத்தை அமல்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

தகுதியுள்ள அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி, கலைஞர் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படும். அமராவதி பாசனக் குளறுபடிகள் சரி செய்யப்பட்டு, நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். உடுமலை-புலி சாலை அகலப்படுத்தப்படும் என்றார்.

முன்னதாக, குமரந்தப்பாளையம், கொழுமம் வழியாகச் சென்று ரெட்டிபாளையத்தில் நிறைவடைந்தது இந்தப் பிரச்சாரத்தில், திமுக ஒன்றியச் செயலாளர் ஈசன் சாதுல் அமீது, ராமலிங்கம், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ், தாலுகா செயலாளர் வடிவேல், சிபிஐ சங்கத்தின் வீரசெல்வம், விவசாய சங்கத்தின் வீரப்பன், காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்கண்ணன் விசிக மாவட்டச் செயலாளர் சதிஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.