மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: 3 காவல் அதிகாரிகளின் மனுக்கள் தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
1 Oct 2026, 10:49 pm
<p><strong>மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: 3 காவல் அதிகாரிகளின் மனுக்கள் தீர்ப்புக்காக ஒத்திவைப்பு</strong></p><p>மதுரை, அக். 1 –மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் சிறையில் உள்ள மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம்காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதானதீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாங்கள் முறையாக ஆஜராகி வந்ததாகவும், தங்களைக் கைது செய்யக்கூடாதுஎன ஏற்கனவே உத்தரவு பெற்றிருந்ததாகவும் காவல் அதிகாரிகள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். கடந்த வாரம்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு தங்களை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட உத்தரவு இயற்கைநீதிக்கு மாறானது என்பதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர்.இம்மனுக்கள் நீதிபதி முருகன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டதாக வாதிடப்பட்டது. பாதிக்கப்பட்ட தரப்பில், மனுதாரர்கள் வெளியில் இருந்தால் சாட்சிகளைக் கலைக்கக்கூடும்என வாதிடப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.</p>
