எஸ்.ஐ.ஆர் முறைகேடுகளை ஆராய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி. லோகுர் தலைமையில் குழு அரசியலமைப்பிற்கான வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு
3 Oct 2026, 10:02 pm

எஸ்.ஐ.ஆர் முறைகேடுகளை ஆராய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி. லோகுர் தலைமையில் குழு அரசியலமைப்பிற்கான வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

புதுதில்லிதேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிரத் திருத்்தப் (எஸ்.ஐ.ஆர்) பணிகளின் சட்டப்பூர்வத் தன்மையையும்,தகுதியுள்ள வாக்காளர்கள் மீது ஸ்.ஐ.ஆர் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் ஆய்வு செய்ய, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி. லோகுர் தலைமையில் 5 முன்னாள் நீதிபதிகள் கொண்ட சுதந்திரமான குழுவை ‘அரசியலமைப்பிற்கான வழக்கறிஞர்கள் சங்கம்’ (Lawyers’ Association for Constitution - LAFC) அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக அரசியலமைப்பிற்கான வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதா வது,”எஸ்.ஐ.ஆர் பணியின் உண்மைத் தன்மையை ஆராயும் குழுவில்,உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. பட்நாயக், ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமைநீதிபதி பதர்துரேஸ் அகமது, தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரேகாசர்மா மற்றும் பாட்னா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிஅஞ்சனா பிரகாஷ் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு முழு சுயாட்சியுடன் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ செல்லுபடித் தன்மை, அதற்காகப்பின்பற்றப்பட்ட முறைகள் மற்றும்தகுதியுள்ள வாக்காளர்கள் மீது ஏற்படுத்திய ஒட்டுமொத்தப் பாதிப்புகள் குறித்துவிரிவாக ஆய்வு செய்யும்.

மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், பிரசாந்த் பூஷன், சந்தர்உதய் சிங், பிரஷாந்தோ சந்திர சென், ராஜு ராமச்சந்திரன், ரெபேக்கா மாமன் ஜான், வரிஷா பராசத் மற்றும் விரிந்தா குரோவர் ஆகியோர் இக்குழுவிற்குச் சட்டஆலோசனைகளை வழங்குவர். இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை 2026 டிசம்பருக்குள் பொதுமக்களுக்கு வெளியிடுவதை இலக்காகக் கொண்டுள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.