ஆர்எஸ்எஸ்-பாஜகவின் பிரிவினைவாத சூழ்ச்சிகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஓரணியில் திரள்வீர்! தென்காசி கூட்டத்தில் எம்.ஏ.பேபி அழைப்பு
11 Jun 2026, 9:09 pm

ஆர்எஸ்எஸ்-பாஜகவின் பிரிவினைவாத சூழ்ச்சிகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஓரணியில் திரள்வீர்!

தென்காசி கூட்டத்தில் எம்.ஏ.பேபி அழைப்பு

தென்காசி, ஜூன் 11- இந்தியாவின் மதச்சார்பற்ற அர சியலமைப்புச் சட்டத்தின் அடிநாதத்தைத் தகர்க்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் பிரிவினைவாத சூழ்ச்சிகளை முறியடிக்கவும், மாற்று அரசியல் சக்தி யான இடதுசாரி இயக்கங்களின் செங் கொடியை ஏந்திப் போராடவும் முற்போக்கு சக்திகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி அறைகூவல் விடுத்துள்ளார். தென்காசியில் புதன்கிழமை (ஜூன் 10) மாலை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் பகுதிகள்:

இந்தியப் பண்பாடும் மத நல்லிணக்கமும்

அனைத்து மக்களுடைய தனிப்பட்ட மத நம்பிக்கையையும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி எப்போதும் மிக உயர்வாக மதிக்கிறது. நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமையின்படி, நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு அனைத்து தரப்பு சாதியினரும், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களும் இன் றைக்கு ஆலயங்களுக்குச் சென்று வழிபடக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. எனினும், சாதாரண மக்களை அனு மதிக்காத, முற்பட்ட வகுப்பினர் மட்டுமே செல்லக்கூடிய சில ஆலயங்கள் இன் றைக்கும் நீடிக்கும் நிலையை மாற்றி, அனைவருக்கும் வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்ற உரத்த குரலை நாம் தொடர்ந்து எழுப்பி வருகிறோம். இதே வேளையில், வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மிக நீண்ட காலமாகப் பேணப்பட்டு வந்த ஓர் உயரிய மத நல்லிணக்கப் பண்பாட்டை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். தமிழ்நாட்டில் நாதஸ்வ ரம் எவ்வாறு புகழ்பெற்றதோ, அதே போல் வடஇந்தியாவில் பிரசித்தி பெற்ற இசைக்கருவி செனாய் ஆகும். அந்த காசி விஸ்வநாதர் ஆலயத்தில், மிக நீண்ட காலமாக செனாய் இசையைத் தடையின்றி இசைத்து வந்த மகத்தான இசை மேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான் என்ற இஸ்லாமியர் ஆவார். அவர் உயிரோடு இருந்த காலம் வரை, விஸ்வ நாதர் ஆலயத்தின் வழிபாட்டு நிகழ்வு களிலிருந்து அவரது செனாய் இசையைப் பிரிக்கவே முடியாத அளவிற்கு அது ஆல யத்தோடு ஒன்றிப் போயிருந்தது. ஒருமுறை அமெரிக்காவிலிருந்து வந்த பக்தர்கள், அவரை அமெரிக்கா விற்கு வந்து செனாய் இசைக்குமாறு அழைத்தபோது, “என்னுடைய உயிர் உள்ளவரை காசி விஸ்வநாதர் ஆலயத் தில் செனாய் இசைப்பதுதான் எனக்குப் பெருமிதம்; நான் அமெரிக்காவிற்கு வர மாட்டேன்” என்று மறுத்தவர் அவர். அத்த கைய மாமேதை பிஸ்மில்லா கான் வாழ்ந்த மகத்தான பூமிதான் நம்முடைய இந்திய பூமி. நாடாளுமன்ற ஜனநாயகத்தை

முடக்கும் சூழ்ச்சி

மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தொகுதி மறுவரையறை என்ற பெயரில் உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற சில வட இந்திய மாநிலங்களின் பலத்தை மட்டுமே கொண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்துக் கட்டமைப்புகளையும் தகர்க்கும் சூழ்ச்சி களைச் செய்து வருகின்றனர். இதன் மூலம் தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, ஹிட்லர் பாணியிலான பாசிச நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிக் கிறார்கள். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி யின் திரிணாமுல் காங்கிரஸை உடைத்து, 20 எம்.பி.க்களை விலைக்கு வாங்கியிருக் கிறார்கள்; இது போன்ற நடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று, 2029-இல் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை அமல்படுத்தத் துடிக்கிறார்கள். இதன் நோக்கம், இந்தி யாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை உடைத்துவிட்டு, அந்த இடத்தில் பிரா மணிய மேலாதிக்கம் நிறைந்த மதவாத ஆட்சியை நிறுவுவதே ஆகும். இதைத் தடுத்து நிறுத்த, அண்மையில் கூடிய கட்சியின் மத்திய மற்றும் மாநிலக் குழுக்கள் தீவிரமாகச் செயல்பட முடி வெடுத்துள்ளன.

தமிழக அரசியல் சூழலும் மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை நிலைப்பாடும்

சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் மே 4 வாக்கு எண்ணிக்கையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளை நிரா கரித்த தமிழக மக்கள், ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை தனிப்பெரும் கட்சியாகத் தேர்ந்தெடுத்தனர். எனினும், அக்கட்சிக்கு முழுமையான பெரும்பான்மை கிடைக் காமல் 11 இடங்கள் பற்றாக்குறையாக இருந்தது. இத்தகைய அரசியல் இழுபறிச் சூழலில், தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே கொள்கைப்பூர்வ மான, உயரிய கோட்பாட்டு நிலைப் பாட்டை எடுத்தன. “மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து, அரசியலமைப்புச் சட்ட விதி களின்படி தனிப்பெரும் கட்சியான தவெக முதலில் ஆட்சி அமைக்க அழைக்கப்பட வேண்டும்” என்ற நிலைப் பாட்டை எடுத்து, அதனை திமுக தலை மையிடமும் நேரடியாகத் தெரிவித்தன. புறவாசல் வழியாக நடந்த வேறு வித மான முயற்சிகள் அனைத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியோடு தடுத்து நிறுத்தின.

வெளியிலிருந்து ஆதரவும் வர்க்கப் போராட்டமும்

தவெக ஆட்சி அமைக்க நாம் ஆதர வுக் கடிதம் அளித்ததைத் தொடர்ந்து, தவெக தலைவர் ஜோசப் விஜய் நமக்கு அமைச்சரவையில் இடமளிக்க முன் வந்தார். எனினும், அந்தப் பதவி வாய்ப்பை மறுத்து, கொள்கைக்காக வெளியிலிருந்து மட்டுமே ஆதரவளிக் கும் முடிவை இடதுசாரிக் கட்சிகள் எடுத்தன. மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங் கள், இளைஞர்கள், பெண்கள், தொழி லாளர்கள், விவசாயிகளின் நலன்கள் மற்றும் மதச்சார்பின்மை விழுமியங்களை தவெக அரசு பாதுகாக்கும் வரை நமது ஆதரவு நீடிக்கும். மக்களுக்கு விரோத மாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கி போராடுவோம்.

களத்தில் நிற்கும் செங்கொடி இயக்கம்

கொள்கைகளை மேடையில் பேசுவ தோடு மட்டுமல்லாமல், மக்கள் பாதிக்கப் படும் போது களத்தில் நின்று ரத்தம் சிந்து வது செங்கொடி இயக்கம் மட்டுமே. மேற்கு வங்கத்தில் ஜாதவ்பூர் பகுதியில் ஏழை மக்களின் கடைகளை புல்டோசர் கொண்டு இடித்த பாஜக அரசுக்கு எதிராகப் போராடிய நமது மத்தியக் குழு உறுப்பினர் சுஜன் சக்கரவர்த்தி, இந்திய மாணவர் சங்கப் பொதுச் செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா ஆகியோர் காவல் துறையின் தடியடியில் தலைகளில் ரத்தம் சொட்டச் சொட்டக் களத்தில் நின்ற னர். அதேபோல் தில்லி, நொய்டா பகுதி களிலும் தொழிலாளர்களுக்காகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். கேரளத்தில் கடந்த பத்தாண்டு கால இடது ஜனநாயக முன்னணி அரசு, தீவிர வறுமையை ஒழித்து மகத்தான சாதனை களைப் படைத்துள்ளது. முதலாளித்துவ ஊடகங்களின் பொய் பிரச்சாரங்களால் தற்காலிகமாக நாம் அங்கு ஆட்சியை இழந்திருக்கலாம். ஆனால், தவறு களைக் களைந்து, மக்கள் போராட்டங்கள் மூலம் கேரள மண்ணில் மீண்டும் செங் கொடி பறக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும், மதச்சார்பற்ற இந்தியக் குடியரசைப் பாதுகாக்கவும் தமிழக மண்ணில் உள்ள முற்போக்கு மற்றும் இடதுசாரி சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து செங்கொடியை உயர்த்திப் பிடித்து முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி உரையாற்றினார்.