தில்லி கட்டுப்பாடுகள் – உச்ச நீதிமன்றத்தில் எம்.ஏ.பேபி மனு
9 Oct 2026, 2:57 pm
<p>தில்லியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.</p><p>அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள மாணவர்-இளைஞர் போராட்டங்களை ஒடுக்க ஒன்றிய அரசு தலைநகர் தில்லியில் ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. தில்லி செல்லக்கூடிய ரயில் சேவைகள் ரத்து, மெட்ரோ நிலையங்கள் மற்றும் இணையச் சேவை முடக்கம் உள்ளிட்டவை இந்தக் கட்டுப்பாடுகளில் அடங்கும். இந்த நிலையில், தில்லியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.</p><p>இவ்வழக்கில் எம்.ஏ.பேபி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.</p><p>இம்மனுவை இன்றே விசாரிக்கக் கோரி, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அவசர முறையீடு செய்தார். </p>
