பாஜக பாணியில் பாசிஸ்ட்டுகளை கொண்டாடும் காங்கிரஸ்? இறையாண்மையை விட்டுக் கொடுப்பதா: பேபி கடும் சாடல்
17 Jun 2026, 8:31 pm

பாஜக பாணியில் பாசிஸ்ட்டுகளை கொண்டாடும் காங்கிரஸ்? இறையாண்மையை விட்டுக் கொடுப்பதா: பேபி கடும் சாடல்

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பாஜக பாணியில் பாசிஸ்ட்டு களை கொண்டாடுவது அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள அமெ ரிக்கத் தூதரகத்தை ஒட்டியுள்ள சாலைக்கு, அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப்பின் பெயரைச் சூட்ட தெலுங்கானா அரசு முடிவு எடுத்துள்ளதாக அவர் அறி வித்துள்ளார். முன்னதாக நீர்நிலை களில் உலா ஆக்கிரமிப்புகளை அகற்ற ஹைட்ரா (Hyderabad Disaster Response and Asset Protection Agency-HYDRAA,) என்ற அமைப்பை அமைத்தார். இந்த பெயரை ஹிட்லரின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் அடிப்படையில் வைத்ததாக அவரே கூறி இருந்தார். இந்நிலையில் பாஜக தான் ஹிட்லர், டிரம்ப் போன்ற பாசிஸ்ட்டு களையும் போர் வெறியர்களையும் கொண்டாடும். தற்போது அவர்கள் வழியில் காங்கிரசும் இணைந்து கொண்டதா என கேள்விகள் எழுந்துள்ளன.

எம்.ஏ.பேபி விமர்சனம்

இந்நிலையில் டிரம்ப்பின் பெயரைச் சூட்டும் தெலுங்கானா முதல்வரின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி கடுமையாக விமர்சித்துள் ளார். அரசின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாகப் பொருத்த மற்றது என்றும், இந்தியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பரி யத்திற்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவின் பொது அடையாளங்கள் எப்போதுமே ஏகாதிபத்தியத்திற்கும், வெளி நாட்டு ராணுவத் தலையீடுகளுக் கும் எதிரான எதிர்ப்பையே பாரம் பரியமாகப் பிரதிபலித்து வந்துள் ளன. டிரம்ப் ஒரு தீவிரமான ஆக்கி ரமிப்பு வெளியுறவுக் கொள்கை அணுகுமுறையைப் பின்பற்றுப வர். உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா ராணுவ மோதல்களி லும் தலையீடுகளிலும் ஈடுபட்டு வரும் வேளையில் பொது அடை யாளமாக விளங்கும் ஒரு இடத்துக்கு அவரது பெயரைச் சூட்டி கௌரவிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பாஜக தலைமை யிலான ஒன்றிய அரசும், தெலுங்கா னாவில் உள்ள காங்கிரஸ் அரசும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து வருவதாக பேபி கடுமையாகச் சாடியுள்ளார்.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப் பான ஏபிவிபியில் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.