தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரியின் பேச்சு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது! - எம்.ஏ.பேபி

28 Apr 2026, 1:55 pm
நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரியின் பேச்சு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது! - எம்.ஏ.பேபி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரியின் பேச்சு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் போபாலில் தேசிய சட்டக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, மாணவர்கள் பண்பாட்டு வேர்களுடன் இணைக்க தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் (NLUs) மாணவர்கள் ‘மனுஸ்மிருதி’ ‘அர்த்த சாஸ்திரம்’ போன்றவற்றை கட்டாயமாக படிக்க வேண்டுமென்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரியின் பேச்சு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

"சட்டக் கல்வியை இந்தியமயமாக்க மனுஸ்மிருதி மற்றும் பிற மத நூல்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி கூறியிருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களில் இருந்து விலகி, மீண்டும் பழைய வர்ணாசிரம முறைக்கே பின்னோக்கிச் செல்வதைக் காட்டுகிறது.

கட்டமைப்பு ரீதியான சமத்துவமின்மைகளை, வெறும் "கலாச்சார வேர்கள்" சார்ந்த ஒரு நெருக்கடியாக சுருக்குவது, சாதி, வர்க்கம் மற்றும் நீதிக்கான அணுகல் ஆகியவற்றின் எதார்த்தமான கள உண்மைகளை மறைப்பதாக அமைகிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.