தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘மார்க்சிய ஆசான் தோழர் எஸ்.ஏ.பி’ 65 ஆண்டுகால செங்கொடிப் பயணத்தின் ஆவணப் பெட்டகத்தை வெளியிட்டார் எம்.ஏ.பேபி!

9 May 2026, 10:02 pm
‘மார்க்சிய ஆசான் தோழர் எஸ்.ஏ.பி’ 65 ஆண்டுகால செங்கொடிப் பயணத்தின் ஆவணப் பெட்டகத்தை வெளியிட்டார் எம்.ஏ.பேபி!

‘மார்க்சிய ஆசான் தோழர் எஸ்.ஏ.பி’ 65 ஆண்டுகால செங்கொடிப் பயணத்தின் ஆவணப் பெட்டகத்தை வெளியிட்டார் எம்.ஏ.பேபி!

மதுரை, மே 9 – அடக்குமுறைகளும், கொந் தளிப்பும் நிறைந்த அரசியல் சூழலில் கம்யூனிசப் பாதையில் தடம் பதித்து, 65 ஆண்டுகால மாகத் தன் வாழ்வையே இயக் கத்திற்காக அர்ப்பணித்தி ருக்கும் ‘மார்க்சிய ஆசான்’ எஸ்.ஏ. பெருமாள் (எஸ்.ஏ.பி) அவர்களின் வாழ்வைச் சித்த ரிக்கும் நூல் வெளியீட்டு விழா மதுரையில் மே 9 சனிக்கிழமை உணர்ச்சிப்பூர்வமாக நடை பெற்றது. இவ்விழாவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி நூலி னை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்.

“அடக்குமுறைகளை வென்றெடுத்த போராட்ட வாழ்வு”

கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி. ராம கிருஷ்ணன் தனது வாழ்த்துரை யில், எஸ்.ஏ.பி-யின் பன் முகத்தன்மையை விரிவாகப் பதிவு செய்தார். “ஒரு வரை அவர் வாழ்கின்ற போதே கொண்டாட வேண்டும். எஸ்.ஏ.பி அவர்கள் எழுத்தாள ராக, போராட்ட வீரராக, தொழிற் சங்கத் தலைவராகப் பல்வேறு தளங்களில் இயங்கியவர். 1970-களில் நெய்வேலி, சென்னை சிம்சன் போராட்டம், எம்.ஆர்.எஃப் போன்ற போராட்டக் களங்களில் அடக்குமுறையை எதிர்த்து நின்றவர். குறிப் பாக 1968 முதல் 1970 வரையி லான காலகட்டத்தில் தமிழ கத்தில் வளர்ந்து வந்த கம்யூ னிஸ்ட் இயக்கத்தை அழிக்கத் தொடுக்கப்பட்ட வன்முறை களை நெஞ்சுரத்தோடு எதிர் கொண்டவர் எஸ்.ஏ.பி. இன்றைய பரபரப்பான அரசியல் சூழலில், ஜனநாயக இயக்கம் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க இத்த கைய அனுபவங்கள் அவசி யம். கட்சிக்குச் சொத்து என்பது நாம் கட்டிய கட்டடங்களோ, வாகனங்களோ அல்ல; லட்சக் கணக்கான கிளை அமைப்பு களும், அதில் இயங்கும் அர்ப் பணிப்புள்ள தோழர்களுமே உண்மையான சொத்து. எஸ்.ஏ.பி-யின் கருத்தியல் பணி குறித்துக் குறிப்பிடுகையில், இராமநாதபுரம் கிராமத்தில் அவர் எடுத்த பொருள் முதல்வாத வகுப்பு இன்றும் நினைவுகூரத்தக்கது. தத்து வங்களை எளிய மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அவர் வல்லவர். அதேபோல், கட்சித் தோழர்களின் குடும்பங்களைப் பாதுகாப்பதிலும் அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார். வி.பி. சிந்தன், சங்கரய்யா போன்ற தலைவர்களின் குடும் பங்களில் ஒருவராக எஸ்.ஏ.பி விளங்கினார். சங்கரய்யா வீட்டுத் திருமணங்கள் முதல் எளிய கிளைத் தோழரின் வீட்டு விசேஷங்கள் வரை அனைத்தி லும் முன்னின்று பங்காற்றியவர். குறிப்பாக, வி.பி.சி-யால் முன்மொழியப்பட்டுத் திரும ணம் செய்து வைக்கப்பட்ட எஸ்.ஏ.பி-யின் வாழ்க்கை, ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இயந் திரத்தனமாக இல்லாமல், மிகுந்த மனிதநேயத்தோடு வாழ வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த சான்று” என்று நெகிழ்ச்சி யுடன் குறிப்பிட்டார்.

“இயக்க வரலாற்றின் ஆவணச் சோர்ஸ்”

தமுஎகச மாநிலத் தலை வர் களப்பிரன் பேசுகையில், “கம்யூனிஸ்ட் இயக்கத்திற் கென்று முறையாக ஆவணப் படுத்தப்பட்ட வரலாறுகள் குறை வாக உள்ள சூழலில், எஸ்.ஏ.பி போன்ற தலைவர்களின் பதிவுகள் மிக முக்கியமா னவை. தோழர் கோ.வீரய்யன் அவர்கள் ‘செங்கொடியின் பாதையில் நீண்ட பயணங்கள்’ என்று எழுதியதைப் போல, இதுவும் ஒரு வரலாற்று ஆவணம். இது எஸ்.ஏ.பி-யின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டும் அல்ல; அரை நூற்றாண்டு கால தென்மாவட்ட செங்கொடி இயக்க வரலாற்றின் ஒரு பகுதி யாகும். கொண்டாடப்படாத ஆயிரக் கணக்கான தோழர்களைப் பற்றித் தொடர்ந்து எழுத வேண்டும். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஒருமுறை சொன்னது போல, மறைந்து போன பல தோழர்களின் தியாகங்கள் மௌனமாகிவிடக் கூடாது. தங்கள் வாழ்நாளில் என்றாவது ஒருமுறை இப்படி யெல்லாம் பதிவு செய்யப்படு வோமா என்று ஏங்கும் அந்தத் தியாக வாழ்வை ஆவணப் படுத்தும் பணியை நாம் செய்ய வேண்டும்” என்றார்.

“திறமைகளை மக்கள் பணிக்காகக் கூர்மைப்படுத்துவோம்”

நெகிழ்ச்சியான ஏற்புரை வழங்கிய தோழர் எஸ்.ஏ. பெரு மாள், “கல்லூரிப் பருவத்தி லேயே முழுநேர ஊழியராக வந்தவன் நான். அடிதடிகளும் போலீஸ் கண்காணிப்பும் நிறைந்த நாட்களில் அரசிய லுக்கு வந்தோம். 34 நூல்களை எழுதியுள்ளேன். புத்தகங்கள் மனித மனங்களை மாற்றும் வலிமை கொண்டவை. ‘மனித குல வரலாறு’ நூல் 30,000 பிரதிகள் விற்பனையாகி யுள்ளது. இன்றைய ‘ஜென்ஸி’ (Gen Z) தலைமுறை சினிமா மோகத்தில் இருக்கலாம்; அவர்களுக்குத் திராவிடம், கம்யூனிசம் பற்றித் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்க ளை ஒதுக்கிவிடக் கூடாது. அவர்களோடு நெருங்கிப் பழகி, அன்பால் வென்றெடுத்து இயக்கத்திற்குள் கொண்டு வர வேண்டும். நாம் தாயின் மடி யிலிருந்தே கம்யூனிஸ்டுகளாகப் பிறக்கவில்லை; நாமும் ஏதோ ஒரு சூழலில் ஈர்க்கப்பட்டுத் தான் வந்தோம். அந்த அணுகு முறை நமக்குப் பெருக வேண்டும். எந்தக் கட்சியினரையும் நான் பகைத்துக்கொள்வதில்லை. ஆர்.எஸ்.எஸ்-காரராக இருந்தாலும் பழகும் முறை யால் மாற்றி, மார்க்சியத்தை ஏற்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். மகாத்மா காந்தி காலத்தில் மைக் இல்லை, ஆனாலும் லட்சம் பேரிடம் அவர் பேசிய உரையின் செய்தி சென்றது. இன்று தொழில்நுட்ப வசதிகள் உள்ளன, அவற்றை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். எங்களால் ஓடியாட முடியாவிட்டாலும், இறுதி வரை உறுதியாக நின்று, செங்கொடியைப் போர்த்திக் கொள்ளும் வரை இந்த இயக் கத்திற்காகவே உழைப்போம். திராவிட இயக்கங்களுக்கும் நமக்கும் 100 ஆண்டுகால விவாதம் உண்டு. அனைத்தை யும் உள்வாங்கி, இன்றும் மக்களி டம் கொண்டு செல்ல வேண்டும். கலை, இலக்கியம் மற்றும் அரசியல் எனப் பல்துறைக ளிலும் நாம் தொடர்ந்து பயின்று கொண்டே இருக்க வேண்டும்; படிப்புதான் நம்மை ஒரு சிறந்த படைப்பாளியாக மாற்றும்” என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார்.

பங்கேற்பாளர்கள்

இவ்விழாவில் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலா ளர் ஆ.குருசாமி, இராமநாத புரம் மாவட்டச் செயலாளர் ஆர். குருவேல், சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணே சன், புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன் ஆகி யோர் முன்னிலை வகித்தார் கள். மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி வாழ்த்துரை வழங்கினார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், கே.அர்ஜூனன், தீக்கதிர் நாளிதழ் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், மாநி லக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ்.பாலா, எழுத்தாளர் ஸ்ரீரசா உள்ளிட் டோர் பங்கேற்றனர். நூலாசிரியர் எம்.ஜே.பிரபா கர் வரவேற்றுப் பேச, ஹேமா ராகேஷ் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார். எழுத்தாளர் ஆர்.எம்.பாபு நன்றி கூறினார். எஸ்.ஏ.பி-யின் துணைவியார் வசந்தா, அவரது சகோதரி ரீடா, சுகாசினி உள்ளிட்ட குடும்பத்தி னரும் விழாவில் பங்கேற்றனர். விழாவின் நிறைவாக, கட்சி யின் மூத்த தோழர்களின் அர்ப்ப ணிப்புமிக்க வாழ்வை இளைய தலைமுறைக்குக் கடத்துவ தற்கான உறுதிமொழி அனை வரிடமும் எதிரொலித்தது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.