முந்தய பக்கம்

பாலஸ்தீன தூதருடன் எம்.ஏ.பேபி சந்திப்பு

29 Oct 2026, 9:43 pm
பாலஸ்தீன தூதருடன் எம்.ஏ.பேபி சந்திப்பு

பாலஸ்தீன தூதருடன் எம்.ஏ.பேபி சந்திப்பு

பாலஸ்தீன நாட்டின் இந்தியாவிற்கான தூதராக இருப்பவர் அப்துல்லா முகமது அபுஷாவேஷ். புதனன்று தில்லியிலுள்ள ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் பவனுக்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்த முகமது அபுஷாவேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் சர்வதேசத் துறையின் தலைவருமான ஆர்.அருண் குமார் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் பாலஸ்தீன மக்களின் சுதந்திரம், கண்ணியம் மற்றும் தனிநாடு அமைப்பதற்கான போராட்டத்திற்கு சிபிஎம் தனது அசைக்க முடியாத ஆதரவையும், தோழமையையும் அளிக்கும் என்பதை முகமது அபுஷாவேஷிடம் எம்.ஏ.பேபி மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram