அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் மக்களின் உரிமைகளை பாதுகாப்போம்! குஜராத்தில் எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்கள் அறைகூவல்
13 minutes before

அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் மக்களின் உரிமைகளை பாதுகாப்போம்!

குஜராத்தில் எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்கள் அறைகூவல்

அகமதாபாத்குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயக அமைப்புகள், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் 24அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி தொடங்கி வைத்தார். அர

சியல் தலைமைக்குழு உறுப்பினர் மரியம் தாவ்லே, மத்தியக் குழு உறுப்பினர் முரளிதரன், மாநிலச் செயலாளர் ஹிதேந்திர பட், மூத்த தலைவர் அருண் மேத்தா ஆகியோரும் கூட்டத்தில் உரையாற்றினர். இந்திய சோசலிச ஒற்றுமைமையம்(எஸ்யுசிஐ), இந்து மஸ்தூர் சபா மற்றும் பல்வேறு

காப்பீட்டுத் துறை ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.போராட்டங்களைத் தீவிரப்படுத்தவும் வேண்டும்கூட்டத்தில் எம்.ஏ.பேபி உள்ளிட்டதலைவர்கள் பேசியதாவது, “நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும், ஜனநாயக அமைப்புகளைப் பேணவும்,

குடிமக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கவும், தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும். அதே சமயம் மதச்சார்பின்மை, சமூக நீதி, உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. அரசியலமைப்பு விழுமியங்கள், ஜனநாயக உரிமைகள், சாமானிய மக்களின் நலன்களைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ள ஒன்றிய அரசின் கொள்கைகள், நடவடிக்கைகளுக்கு எதிராகத்தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், சமூகத்தின் பிற ஜனநாயகப் பிரிவினர் ஒன்றிணைய வேண்டும். அதே சமயம் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்தவும், ஜனநாயகப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தவும் வேண்டும். அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகக்கோட்பாடுகளைப் பாதுகாப்பதற்குத் தொடர்ச்சியான மக்கள் திரட்டலும், விரிவுபடுத்தப்பட்ட இயக்கமும் அவசியம் ஆகும்.

அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி, தேசிய ஒற்றுமை, உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மக்கள் இயக்கங்களை வலுப்படுத்துவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாகஉள்ளது” என தலைவர்கள் உரையாற்றினர்.