பதவியில் தொடர தார்மீக உரிமை இல்லை! தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனே பதவி விலக வேண்டும்! எம்.ஏ. பேபி வலியுறுத்தல்
24 Sept 2026, 9:51 pm

பதவியில் தொடர தார்மீக உரிமை இல்லை! தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனே பதவி விலக வேண்டும்!

எம்.ஏ. பேபி வலியுறுத்தல்

புதுதில்லி, செப். 23 -தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் தொடர்வதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டார் எனவும், அவர்உடனடியாக விலக வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கடுமையாகக் கூறியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக ரிதிகா சோப்ரா தலைமையிலான குழு நடத்திய ஆய்வின் அடிப்படையில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் செப்டம்பர் 23-இல் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்களைத் தொடர்ந்து தில்லியில் புதனன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதைத் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வியாழனன்று வெளியிட்டது.

“நம்பகத்தன்மையே கேள்விக்குறியானது”

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் வெளிப்படுத்தல்கள், எஸ்ஐஆர் செயல்முறை மட்டுமின்றி, தேர்தல் ஆணையத்தின் நேர்மை குறித்தே கடுமையான கேள்விகளை எழுப்புவதாக பேபி தெரிவித்தார். எஸ்ஐஆர் தொடங்கியதிலிருந்தே தாமும் மற்ற எதிர்க்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் முன்வைத்து வந்த சந்தேகங்களை இந்த வெளிப்படுத்தல்கள் மேலும் உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். ஜனநாயகத்திற்காக பொறுப்புக்கூறலை நிலைநிறுத்திய ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையாளர்களை அவர் பாராட்டினார்.

மூவரில் இருவர் ஆட்சேபணை

மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர், வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் எஸ்ஐஆர்செயல்பாடு தொடர்பான பல முடிவுகளில் எழுத்துப்பூர்வமாக ஆட்சேபணை பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக பேபி தெரிவித்தார். சட்டப்படி மூன்று

ஆணையர்களும் சமமானவர்கள் எனவும், முடிவெடுக்கும் விஷயங்களைப் பொறுத்தவரை, கருத்து வேறுபாடு, ஒற்றுமை அல்லது பெரும்பான்மை அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் இருந்தாலும், 14 சந்தர்ப்பங்களில் பதிவான பெரும்பான்மைக் கருத்தை தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் புறக்கணித்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். வாக்காளர் சேர்க்கை -நீக்கம் மற்றும் எஸ்ஐஆர் அமல்படுத்தல் தொடர்பான அடிப்படைக் கேள்விகளிலேயே இந்த முரண்பாடு உள்ளதாகவும், முழு செயல்முறையும்வெளிப்படையானது, பரவலாக்கப்பட்டது என தலைமை ஆணையர் தொடர்ந்து கூறி வந்திருந்தாலும், கடந்த சில மாதங்களில் அது யார் முடிவெடுக்கிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு மையப்படுத்தப்பட்டு இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் பேபி தெரிவித்தார். தொழில்நுட்பத்தை அளவுக்கு மீறி நம்பியிருப்பதையும், இயந்திரத்தனமாக நோட்டீஸ்கள் அனுப்பப்படுவதையும் உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டி இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

ஆணையர் நியமன முறையில் திருத்தம் வேண்டும்

தேர்தல் ஆணையர் நியமனத்திற்கு பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு அமைக்குமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, மோடி - அமித்ஷா தலைமையிலான அரசு, அவசரச் சட்டம் கொண்டுவந்து- பின்னர் நாடாளுமன்றத்திலும் சட்டமாக்கியதன் மூலம்- புறக்கணித்ததாக பேபி விமர்சித்தார். இதன்படி பிரதமரும் அமைச்சரவையிலிருந்து பிரதமர் பரிந்துரைக்கும் ஒருவரும் சேர்ந்து மூவரில் இருவர் என்ற பெரும்பான்மையை பெறுவதால், எதிர்க்கட்சித் தலைவரின் குரல் ஓரங்கட்டப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படுவதை எதிர்த்து பல்வேறு தேர்தல் ஆணைய அலுவலகங்கள் முன், பொதுமக்கள் வரிசையில் நிற்க நேரிடும் நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் தலைமைக் குழு வலியுறுத்தல்

இதன் அடிப்படையில், “எஸ்ஐஆர் செயல்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும், தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாடும் ஜனநாயகத்தன்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும், தற்போதைய ஆணையர் நியமனச் சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி புதிய சட்டம் இயற்ற வேண்டும்” என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

ஆணையத்தின் நம்பகத்தன்மை மீது, மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட நிலையில், அதற்குப் பொறுப்பேற்று ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

டி.எம். கிருஷ்ணாவை “நக்சல்”என்பதா?

முன்னதாக தனது பேட்டியில், வக்பு வழக்கு விசாரணையின்போது, பாடகரும் பொதுச்சிந்தனையாளருமான டி.எம். கிருஷ்ணா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முரளிக்கு எதிராக, ‘நக்சலைட் மனநிலை’ கொண்டோருக்கு நீதித்துறை செயல்முறை அணுகக்கூடியதாக இருக்கக்கூடாது என ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்ததாகவும், இது கிருஷ்ணாவையே மறைமுகமாகச் சுட்டியதாகவும் பேபி கண்டனம் தெரிவித்தார். இந்தக் கருத்தை வாபஸ் பெறுமாறு முரளி வலியுறுத்திய போதும், சொலிசிட்டர் ஜெனரல் அதை மீண்டும் கூறியதாகவும், உச்சநீதிமன்றம் இதை நிராகரிக்காமல் மற்ற அரசியலமைப்பு விவகாரங்களுக்குச் சென்றதாகவும் பேபி கவலை தெரிவித்தார். ஒரு சட்ட அதிகாரி இத்தகைய மொழியில் பேசக்கூடாது எனவும், டி.எம். கிருஷ்ணாவுக்கும், அவருக்காக நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சனையை எழுப்பிய முரளிக்கும் தமது ஆதரவைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.