தமிழ்நாடு ஆளுநரின் முடிவு முற்றிலும் நியாயமற்றது! - எம்.ஏ.பேபி
7 May 2026, 5:59 pm

தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை ஆட்சி அமைப்பதற்கு அழைக்க மறுத்தது, 'முற்றிலும் நியாயமற்றது' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களுடன் தனிப் பெருங்கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய், கிண்டி மக்கள் பவனில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேற்று நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். எனினும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான 118 என்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை விஜய் நிரூபிக்காத நிலையில், அவருக்கு ஆளுநர் அர்லேகர், இன்னும் அழைப்பு விடுக்கவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை ஆட்சி அமைப்பதற்கு அழைக்க மறுத்தது, "முற்றிலும் நியாயமற்றது", அரசியலமைப்புக்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலமைப்பு மரபுகளின்படி, தனிப்பெரும் கட்சியைச் சேர்ந்த தலைவரை ஆளுநர் முதலில் பதவியேற்கச் செய்ய வேண்டும் என்றும், அவையில் தனது பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க அவருக்குப் போதுமான கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.