தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜனநாயக மரபுகளை மதிக்காத மோடி அரசு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்! - எம்.ஏ.பேபி

16 minutes before
ஜனநாயக மரபுகளை மதிக்காத மோடி அரசு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்! - எம்.ஏ.பேபி

மழைக்காலக் கூட்டத்தொடரை இதுவரை முறைப்படி முடித்து வைக்காமலும், குளிர்காலக் கூட்டத்தொடர் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமலும் ஜனநாயக மரபுகளைப் புறக்கணிக்கும் மோடி அரசு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

“மழைக்காலக் கூட்டத்தொடரை இதுவரை முடித்து வைக்காமல் இருப்பது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும். நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முடித்து வைக்கும் (Prorogue) அதிகாரம் ஒன்றிய அரசுக்கு உண்டு என்பது உண்மைதான். வழக்கமாக, நாடாளுமன்றம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட (Adjourned Sine Die) ஒரு வாரத்திற்குள் கூட்டத்தொடர் முறைப்படி முடித்து வைக்கப்படும். இதற்கான தேதியை ஒன்றிய அரசு முடிவு செய்து குடியரசுத் தலைவருக்குத் தெரிவிக்கும். அதன் அடிப்படையில் குடியரசுத் தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்.

கடந்த காலங்களில் ஓரிரு முறை நாடாளுமன்றம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட பிறகும் கூட்டத்தொடர் உடனடியாக முடித்து வைக்கப்படாமல், இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கூட்டப்பட்ட நிகழ்வுகள் உண்டு. ஆனால், தற்போதைய நிலை முற்றிலும் மாறுபட்டது. நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு 100 நாட்களுக்கும் மேலாகிவிட்டன. வழக்கமாக அடுத்த வாரம் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியிருக்க வேண்டும். அதற்கான அறிவிப்பும் இந்நேரம் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறுமா என்பதுகூட நாட்டு மக்களுக்குத் தெரியாத நிலை உள்ளது.

மழைக்காலக் கூட்டத்தொடர் இன்னும் முறைப்படி முடித்து வைக்கப்படாத நிலையில், இப்போது நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் அது குளிர்காலக் கூட்டத்தொடராக இல்லாமல், மழைக்காலக் கூட்டத்தொடரின் தொடர்ச்சியாகவே அமையும். விதிகளின்படி, கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படாத நிலையில், அதனை மீண்டும் கூட்டும் அதிகாரம் மக்களவைத் தலைவருக்கே உண்டு. இதில் குடியரசுத் தலைவருக்குப் பங்கு கிடையாது. இதனால், மிகக் குறுகிய கால அறிவிப்பிலேயே கூட்டத்தொடரைக் கூட்ட முடியும். அப்படிச் செய்தால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை முன்கூட்டியே தாக்கல் செய்வதற்குப் போதிய அவகாசம் கிடைக்காது.

பொதுவாக, கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிடப்படும். இதன் மூலம் உறுப்பினர்கள் கேள்விகளைத் தயாரித்து அவையில் எழுப்புவதற்குப் போதிய கால அவகாசம் கிடைக்கும். ஆனால், பாஜக அரசு நாடாளுமன்றத்தில் கேள்வி நேரமே நடைபெறக் கூடாது என்றோ, முடிந்தவரை அதனைத் தவிர்க்க வேண்டும் என்றோ விரும்புகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

இவ்வளவு அசாதாரணமான காலத்திற்கு மழைக்காலக் கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படாமல் இருப்பதால், ஜனநாயக நடைமுறையின்படி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, எதிர்க்கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுத்திருக்க வேண்டும். ஏனெனில், ஜனநாயகத்தில் ஆளுங்கட்சிக்கு இருப்பதைப் போலவே எதிர்க்கட்சிகளுக்கும் நாடாளுமன்றத்தில் சமமான பங்கு உண்டு.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய தலைவர்களும், பாஜகவை இயக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தும் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களாகவே செயல்படுகின்றனர். ஆரோக்கியமான ஜனநாயக மரபுகள் அவர்களுக்கும் அவர்களது கட்சிக்கும் அந்நியமானவை.

ஆனாலும், ஒன்றிய ஆட்சியாளர்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. அவர்கள் இறுதியில் இந்த நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். தங்களின் ஒவ்வொரு தவறுக்கும் மக்களிடம் பொறுப்பேற்க வேண்டிய நிலை அவர்களுக்கு நிச்சயம் ஏற்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.