எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு முட்டுக்கட்டை போடும் காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி குற்றச்சாட்டு
26 May 2026, 8:57 pm

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு முட்டுக்கட்டை போடும் காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி குற்றச்சாட்டு

புதுதில்லி, மே 26 - ஆர்எஸ்எஸ் - பாஜகவின் அபா யகரமான வலதுசாரி எழுச்சியை வீழ்த்த மதச்சார்பற்ற எதிர்க்கட்சி களின் ஒருங்கிணைப்பு அவசிய மாக உள்ள சூழலில், காங்கிரசின் குறுகிய கால தேர்தல் அணுகு முறையும் செயல்பாடுகளும் அந்த ஒற்றுமைக்கு முட்டுக்கட்டை போடு வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி குற்றம் சாட்டினார்.

தில்லியில் உள்ள ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பவனில் மே 22 முதல் மே 24 வரை நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுவின் மூன்று நாள் கூட்டத்தில், சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் நாட்டின் அரசியல் சூழல் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தின் முடிவுகளைச் செய்தியாளர்களிடம் விளக்கிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, பா.ஜ.க-விற்கு எதிரான தேசிய அளவிலான போராட்டத்தில் காங்கிரசுக்கு முதன்மைப் பங்கு இருக்கிறது என்பதைத் தங்களது கட்சி உணர்ந்திருந்தாலும், மாநில அளவிலான தற்காலிக தேர்தல் லாபங்களுக்காக காங்கிரஸ் கட்சி அரசியல் நாகரிகத்தை சிதைத்து வருவதாகத் தெரிவித்தார்.

கேரளாவில் காங்கிரசின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கடும் கண்டனம்

கேரள சட்டமன்றத் தேர்தல் பிரச் சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி யின் அகில இந்திய தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட மிக முக்கியத்தலைவர் கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது சுமத்திய அடிப்படையற்ற குற்றச் சாட்டுகளை வன்மையாகக் கண்டிப்பதாக பேபி தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி க்கும் பா.ஜ.க-விற்கும் இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாகக் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்தனர். இந்திய அரசியலைப் பற்றிய அடிப்ப டை அறிவு உள்ள எவராலும் கற்ப னை கூட செய்து பார்க்க முடியாத ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, தேர்தல் லாபத்திற்காகக் காங்கிரஸ் கையில் எடுத்தது அதன் அரசியல் கண்ணியமின்மையை வெளிப்படு த்தியது என்று எம்.ஏ. பேபி சாடினார். மேலும், இடது முன்னணியின் தனிப் பட்ட தலைவர்களைக் குறிவைத்து காங்கிரஸ் கட்டவிழ்த்துவிட்ட அவ தூறுகள், பா.ஜ.க-விற்கு எதிரான மதச்சார்பற்ற அரணைப் பலவீனப் படுத்தும் செயல் என்றும் விமர்சித்தார்.

பாஜக ஆட்சிகள் : ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்

தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய பொதுச்செயலாளர், நாட் டின் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களி லும், 7 யூனியன் பிரதேசங்களிலும் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பது நாட்டின் ஜன நாயகக் கட்டமைப்பிற்கு ஏற்பட்டு ள்ள அச்சுறுத்தல் என்றார். மேற்கு வங்கத்தில் பாசிச ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் வழிநடத்தப்படும் பா.ஜ.க முதல்முறையாக ஆட்சி யைப் பிடித்திருப்பதும், அசாமில் கூடுதல் இடங்களுடன் மீண்டும் வென்றிருப்பதும் தீவிரமாகக் கவ னிக்கப்பட வேண்டியவை என்று குறிப்பிட்ட அவர், ஒன்றிய ஆளும் பா.ஜ.க அரசு, அரசியலமைப்பு நிறு வனங்களைத் தங்களுக்குச் சாதக மான கருவிகளாக மாற்றி வருவதை மத்தியக் குழு சுட்டிக்காட்டியுள்ள தாகக் கூறினார்.

குறிப்பாகத் தமிழ்நாட்டில் சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளி யானதைத் தொடர்ந்து, தனிப் பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க முறைப்படி வாய்ப்பளிக்காமல், ஜனாதிபதி மற்றும் ஆளுநர் பதவி களைப் பயன்படுத்தி ஒன்றிய பா.ஜ.க அரசு ஜனநாயகத்திற்குப் புறம்பான வழிகளில் தலையிட முயன்றதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அதேபோல், அசாம் மற்றும் ஜம்மு- காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறை நடவடி க்கைகள் மத்திய ஆட்சியில் உள்ள ஆளும் கட்சிக்கு சாதகமாகவே செய்யப்பட்டன என்றும், அசாமில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வசம் இருந்த சட்டமன்றத் தொகுதி, திட்ட மிட்ட எல்லை மாற்றங்கள் காரண மாகவே இம்முறை பா.ஜ.க-விடம் வீழ வேண்டியதாயிற்று என்று விவா திக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கேரள பின்னடைவும் மேற்குவங்க மீள் எழுச்சிக்கான வாய்ப்பும்

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணிக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் தோல்வி என்பது மிகவும் தீவிர மான ஒரு பின்னடைவு என்பதை ஒப்புக்கொண்ட பொதுச்செய லாளர், கட்சி அமைப்பிற்குள் தற் போது சுதந்திரமான முறையில் மிகப்பெரிய அளவிலான ஜனநாயக மறுஆய்வு செயல்முறை தொட ங்கப்பட்டுள்ளது என்றார். கிளை மற்றும் உள்ளூர்க் குழுக்கள் முதல் மாநிலக் குழு வரை கேரளம் முழு வதும் உள்ள சுமார் 40,000 குழுக் களில் உள்ள 5 லட்சத்திற்கும் அதிக மான கட்சி உறுப்பினர்களுடன் இந்த மறுஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

உள்ளூர்க் குழுக்களின் இந்த விரிவான கருத்துக்கள் ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் கேரள மாநில செயற்குழு மற்றும் மாநிலக் குழு கூட்டங்களில் சமர்ப்பிக்கப் படும். இதேபோன்ற ஆய்வுகள் மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம் மற்றும் புதுச்சேரியிலும் மேற்கொ ள்ளப்படுகின்றன. இந்த மாநிலக் குழுக்களின் அறிக்கைகளை இறுதி செய்வதற்காக, ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் சிறப்பு மத்தியக்குழு கூட்டத்தை கூட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

அதே நேரத்தில், மேற்கு வங்கத்தில் இரு முனை அரசியல் என்ற சூழலை இடதுசாரிகள் வெற்றிகரமாக உடைத்தெறிந்துள்ளனர் என்று எம்.ஏ. பேபி குறிப்பிட்டார். சிபிஐ(எம்-எல்) லிப ரேஷன் உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி அமைப்பு களுடன் இணைந்து ஒரு விரிவான இடதுசாரிக் கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நீண்ட இடை வெளிக்குப் பிறகு பால்டா உள்ளிட்ட தொகுதி களின் தேர்தல் முடிவுகள் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் மேற்கு வங்க சட்ட மன்றத்திற்குள் நுழைந்துள்ளது. உழைக்கும் மக்களின் அசைக்க முடியாத இடதுசாரிக் குரல் இனி சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் என்றும், இது தோழர்களுக்குப் புதிய வீரியத்தை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதே போல், புதுச்சேரியின் மாஹே தொகுதியில் இடதுசாரிகளின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பது சிறியதாக இருந்தாலும் மிக முக்கியமான ஒரு வளர்ச்சிப் பாதையாகும் என்றும் குறிப்பிட்டார்.

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் வாக்காளர் பட்டியலில் பா.ஜ.க-வின் சதித்திட்டம்

அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறு வரையறையுடன் இணைத்துத் தள்ளிப்போடும் பிரதமரின் தந்திரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்பலப்படுத்தியுள்ளது. மசோதாவைத் தொகுதி மறுவரையறையுடன் இணைத்து, மக்க ளவை இடங்களை 800-க்கும் அதிகமாக உயர்த்துவது பா.ஜ.க-வின் திட்டமாகும். இதன் மூலம் உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதே சம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களின் இடங்களை அதிகரித்து, தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் அரசியல் குரலை நசுக்கி, தங்களுக்குச் சாதகமான மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் ‘இந்து ராஷ்டிர’ கொள்கைகளை நிறைவேற்றுவது பா.ஜ.க-வின் சதியாகும் என்று மத்தியக் குழு எச்சரித்து உள்ளது.

இதை சுட்டிக் காட்டிய எம்.ஏ. பேபி, மகளிர் இடஒதுக்கீட்டைத் தொகுதி மறுவரையறை யுடன் இணைக்காமல், நேரடியாக 543 மக்கள வைத் தொகுதிகளுக்கும், மாநில சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 2029 மக்களவைத் தேர்தலி லிருந்தே தனி மசோதாவாகக் கொண்டு வந்து உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலி யுறுத்தினார்.

ஹிட்லரை நினைவுபடுத்தும் நடவடிக்கைகள்

மேலும், நாட்டின் 17 மாநிலங்களில் தற்பொ ழுது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டிய லின் ‘சிறப்பு தீவிர திருத்த முறை’ (SIR) என்பது வாக்காளர்களைச் சேர்ப்பதற்கானது அல்ல, மாறாகப் பெயர்களை நீக்குவதற்கான ஒரு சதிச் செயல் என்று கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்கு ரேஷன் கார்டுகளை ரத்து செய்யவும், அரசு மானியங் களை மறுக்கவும் அம்மாநில அரசுகள் எடுத்து வரும் முடிவுகள், ஹிட்லரின் ஜெர்மனியில் 1935-இல் யூதர்களின் குடியுரிமையைப் பறிப்ப தற்காகக் கொண்டு வரப்பட்ட கொடூரமான நியூரம்பெர்க் சட்டங்களை நினைவுபடுத்துவ தாக உள்ளது என்று பேபி எச்சரித்தார். பீகாரில் மட்டும் சுமார் 5 லட்சம் பெயர்கள் இவ்வாறு ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள தைச் சுட்டிக்காட்டி இத்தகைய பாசிசப் போக்கு களுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பொருளாதார வீழ்ச்சியும் மக்கள் போராட்டங்களும்

இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா ஆகிய நாடு களுக்கு இடையேயான மேற்கு ஆசிய மோதல் களால் இந்தியா எதிர்கொண்டுள்ள கடுமை யான உள்நாட்டுப் பொருளாதார பாதிப்புகள் குறித்து மத்தியக் குழு கவலை தெரிவித்தது. இத்தகைய உலகளாவிய சூழலில், அமெரிக்கா வின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபி யோவை இந்தியாவிற்கு அழைத்து நரேந்திர மோடி அரசு கொண்டாடுவது வெட்கக்கேடா னது என்று பேபி குறிப்பிட்டார்.

தேர்தல் முடிந்தவுடன் நான்கு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி, லிட்டருக்கு 7 ரூபாய்க்கும் மேல் உயர்த்தியிருப்பது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது. பிரத மரின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற அன்னபூர்ணா கோவிலில், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக மார்ச் 15 அன்று 300 ஆண்டுகால பாரம்பரியமிக்க இலவச அன்ன தானத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதை பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டினார்.

விவசாயப் பருவத்தின் தொடக்கத்திலேயே ஏற்பட்டுள்ள உரப் பற்றாக்குறை மற்றும் வழக்கத்தை விடக் குறைவான பருவமழை பெய்யும் என்ற வானிலை கணிப்புகள் உணவுப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி யுள்ளன. மேலும், ஜூலை 1 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் திற்குப் பதிலாக ஒன்றிய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள ‘விக்சித் பாரத் - ரோஜ்கர் மற்றும் ஜீவாதார உத்தரவாத இயக்கம் (கிராமின்)’ என்ற புதிய சட்டத்தின் மூலம் திட்டத்தை சீர்குலைக்க நடக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போரா டும் ஏழை எளிய மக்களுக்கு முழு ஆதரவை வழங்க கட்சி முடிவு செய்துள்ளது என்றும் தெரி வித்தார்.

நொய்டா மற்றும் அதன் சுற்றுவட்டாரத் தொழில்துறை பகுதிகளில் தன்னிச்சையாக எழுந்த தொழிலாளர்களின் போராட்டங்களை யோகி ஆதித்யநாத் அரசு ஒடுக்க முயன்றதைக் கண்டித்த அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தோழர் களும் உடனடியாகச் சென்று தொழிலாளர் களைப் பாதுகாத்ததை நினைவு கூர்ந்தார். மேலும், நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் கார ணமாக தேசிய தேர்வு முகமையை (NTA) முழு மையாகக் கலைக்க வேண்டும் என்றும், பாதிக்கப் பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக மத்திய கல்வி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், நாட்டின் இளை ஞர்கள் மற்றும் மாணவர்களிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பெற்று வரும் பரவலான ஆத ரவை மத்தியக் குழு கவனத்தில் கொண்டது. இது நாட்டில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளின் மைக்கு எதிரான இளைஞர்களின் மிகப்பெரிய விரக்தியின் வெளிப்பாடாகும். இக்கட்சியின் சமூக ஊடகப் பக்கங்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ள ஜனநாயத்திற்குப் புறம்பான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், இளைஞர் களின் குரலை நசுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.