தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்

9 May 2026, 10:52 pm
தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்

தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்

மதுரையில் எம்.ஏ. பேபி பேட்டி மதுரை, மே 9 - தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்த ஒரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மையை வழங்காத நிலையில், ஜனநாயக மரபுகளின்படி தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா ளர் எம்.ஏ. பேபி வலியுறுத்தினார். மதுரையில் சனிக்கிழமை மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

ஆளுநரின் செயல்பாடு முறையற்றது

தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக கூட்டணி பின்னடைவைச் சந்தித்ததுடன், எதிர்க்கட்சிகளாக இருந்த அதிமுக கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தச் சூழலில், விஜய் தலைமை யிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத் துள்ளது. அக்கட்சிக்கு பெரும்பான் மைக்கு 11 இடங்கள் குறைவாக உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் அரசியல் மரபுகளின்படி, தனிப்பெரும் கட்சியையோ அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி யையோ ஆட்சி அமைக்க அழைப் பது ஆளுநரின் கடமையாகும். ஆனால், தமிழக ஆளுநர் விஜய் எவ்வாறு பெரும்பான்மையை நிரூபிப் பார் என்று கேள்வி எழுப்புவது முறை யற்ற செயலாகும்.

முன்னுதாரணங்களும் நீதிமன்றத் தீர்ப்புகளும்

1990-களில் வாஜ்பாய் தலைமை யிலான பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாதபோதும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் அவரை பிரதம ராக அழைத்தது ஒரு முக்கிய முன்னு தாரணமாகும். பின்னர் அவர் பதவி விலகிய சம்பவம் ‘13 நாள் அதிசயம்’ என அறியப்பட்டது. மேலும், எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதி மன்றம், ஒரு கட்சி அல்லது கூட்டணி யின் பெரும்பான்மை சட்டமன்ற தளத் திலேயே (Floor Test) நிரூபிக்கப் பட வேண்டும் என்று தெளிவாகக் கூறி யுள்ளது. இந்த நன்கு நிறுவப்பட்ட கொள்கையைத் தமிழக ஆளுநர் பின்பற்றவில்லை என்பது வருத்தத் திற்குரியது. இதற்கு எதிராக சிபிஐ(எம்) தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. சிபிஐ(எம்) ஆதரவு கடிதம் தமிழக மக்களின் தேர்தல் தீர்ப்பை மாற்ற முயற்சிகள் நடை பெறுவதாகவும், பாஜக ஆதரவு கொண்ட அரசை அமைக்க மறைமுக முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, சிபிஐ(எம்) மாநிலச் செயற்குழு மற்றும் மாநிலக் குழு ஆலோசித்து, தனிப்பெரும் கட்சி யான தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதில், சிபிஐ(எம்) சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவு கட்சியின் அரசி யல் தலைமைக்குழுவுடன் ஆலோ சித்தே எடுக்கப்பட்டது. இது குறித்து திமுக தலைமையிடமும் தகவல் தெரி விக்கப்படும். குதிரை பேரம் தொடர் பான விவாதங்கள் எழுவதற்குக் காரணமே ஆளுநரின் செயல்பாடுகள் தான் என்றும் அவர் விமர்சித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணே சன், மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ். பாலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.