எதிர்காலத்தை நோக்கி புதிய வீரியத்துடன் புறப்படுவோம்! - எம்.ஏ.பேபி
20 May 2026, 9:16 pm

எதிர்காலத்தை நோக்கி புதிய வீரியத்துடன் புறப்படுவோம்! - எம்.ஏ.பேபி

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், இந்திய அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. முதலாவதாக, கேரளாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை முன்னெடுத்த போதிலும், சிபிஐ(எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) தோல்வியடைந்தது நமது சுயபரி சீலனைக்கான தேவையை உணர்த்துகிறது. இரண்டா வதாக, மேற்கு வங்கத்தில் பாஜகவின் வெற்றி, அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது மற்றும் புதுச்சேரியில் என்டிஏ மீண்டும் ஆட்சிக்கு வந்தது ஆகியவை பாஜகவின் தேர்தல் பலம் ஒருங்கி ணைக்கப்படுவதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மூன்றாவதாக, தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் போன்ற ஒரு புதிய அமைப்பின் எழுச்சி, மக்கள் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

கேரளா

கேரளாவைப் பொறுத்தவரை, பதவியிலிருந்து விலகும் எல்டிஎப் அரசாங்கம் தனது தேர்தல் அறிக்கை யில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தை யும் நிறைவேற்றியிருந்தது. தீவிர வறுமையை ஒழித்தது மற்றும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களை அனைவருக்கும் உறுதி செய்ததன் மூலம், நலத்திட்டங்களின் அடிப்படையில் ஒட்டுமொத்த நாட்டிற்கே அது ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தது. ஒன்றிய அரசு விதித்த அனைத்து நிதி மற்றும் நிர்வா கக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், விவசாயம், தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கேரளம் மாபெரும் முன்னேற்றங்களை அடைந்தது. எல்டிஎப் அரசாங்கத்தின் கீழ், நம் நாட்டின் கூட்டாட்சிப் பண்புகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் இந்திய மாநிலங்களுக்கே கேரளம் ஒரு வழிகாட்டி யாக உருவெடுத்தது. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் எந்தவொரு மதவெறி வன்முறையும் நடக்காத ஒரே மாநிலமாக கேரளாவே இருந்தது. இத்தகு சாதனை களுக்கு மத்தியிலும், பத்தாண்டு கால ஆட்சிக்குப் பிறகு எல்டிஎப் தோல்வியடைந்துள்ளது.

மேலும், கேரள வரலாற்றில் முதல்முறையாக, பாஜக சட்டமன்றத்தில் மூன்று இடங்களை வெல்ல முடிந்துள்ளது. இது ஒரு ஆபத்தான வளர்ச்சியாகும், இதைத் தடுக்க மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக உழைக்கும். இருப்பினும், மதவாத சக்திகளிடம் மென் மையான அணுகுமுறையைக் கடைப்பிடித்த காங்கிரசின் பாசாங்குத்தனமான நடத்தையும் கேரளா வில் பாஜகவின் வளர்ச்சிக்குக் பங்களித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். இது நிச்சயமாக அம்பலப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்தத் தேர்தலில் சிபிஐ(எம்) மற்றும் எல்டிஎப் சந்தித்த பின்னடைவு முன்னெப்போதும் இல்லாதது. 5 மாவட்டங்களில், எல்டிஎப்-க்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவமே இல்லை. இருப்பினும், 1977-இல் அவசரநிலையின் போது நடந்த அத்துமீறல்களுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் காங்கிரசுக்கு எதிராக வாக்களித்தபோது, கேரள மக்கள் காங்கிரஸ் கூட்ட ணியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்தனர்; அப்போது சிபிஐ(எம்) தலைமையிலான எதிர்க்கட்சி க்கு சட்டமன்றத்தில் 30 இடங்களுக்கும் குறைவாகவே இருந்தன; மக்களவையில் ஒரு இடத்தில் கூட நாம் வெற்றி பெறவில்லை. ஆனால் 1980-இல் நம்மால் மீண்டும் மீண்டு வர முடிந்தது என்பது நினைவு கூரத்தக்கது.

சிபிஐ(எம்) கேரள மாநிலக் குழு, மொத்த முள்ள 5 லட்சத்திற்கும் அதிகமான கட்சி உறுப்பி னர்களைச் சென்றடைவதற்கான ஒரு நிறுவன ரீதியான உத்தியை வகுத்துள்ளது. 35,000-க்கும் மேற்பட்ட கிளைகள், லோக்கல் கமிட்டிகள், ஏரியா கமிட்டிகள் மற்றும் மாவட்டக் குழுக்களின் பகுதியாக இருக்கும் தோழர்களைச் சந்தித்து, கட்சியின் அனுதாபி களும் எல்டிஎப் ஆதரவாளர்களும் நமக்கு ஏன் வாக்க ளிக்கவில்லை என்பது குறித்து ஆழமான விவாதங்கள் நடத்தப்படும். ஒட்டுமொத்த கட்சி உறுப்பினர்கள் மற்றும் அனுதாபிகளிடமிருந்து, சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விவாதங்கள் மூலம், திருத்தங்கள் மற்றும் கொள்கை மாற்றங்களுக்கான வழிகாட்டுதலைக் கண்டறிய உத்தேசித்துள்ளோம். நமது குறைபாடுகள் குறித்து மேலிருந்து கீழ் வரை விமர்சனமும் சுயவிமர்சனமும் தேவை. அனைத்து மட்டங்களிலும் திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

அசாம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம்

அசாம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜகவின் செயல்பாடு, இந்துத்துவ-மதவெறி, வலதுசாரி சக்திகளின் எழுச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது அனைத்து மதச்சார்பற்ற, முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் ஆழ்ந்த கவலையை அளிப்பதாகும். மேற்கு வங்கத்தில், ஊழல் நிறைந்த திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிரான வலுவான அதிருப்தி, ஒன்றிய அரசின் கீழ் உள்ள முகமைகளின் தவறான பயன்பாடு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சூழ்ச்சிகள் மற்றும் வாக்கா ளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை ஆகிய வற்றிலிருந்து அவர்கள் ஆதாயம் அடைந்தனர். அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் அவர்களின் வெற்றிகள் மதவெறி கொண்ட, பிளவுவாத மற்றும் விஷமத் தனமான வெறுப்புப் பிரச்சாரத்தின் அடிப்படையில் பெறப்பட்டவை. இரு மாநிலங்களிலும் பெருமளவில் பணமும் செலவிடப்பட்டது. இரு மாநிலங்களிலும் நாம் நமது வாக்கு வங்கியை ஓரளவுக்குத் தக்க வைத்துக் கொண்டுள்ளோம், மேற்கு வங்கத்தில் ஒரு இடத்தை வென்றுள்ளோம். எனவே, தொழிலாளர் உரி மைகள், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியைப் பாதுகாப்பதில் சிபிஐ(எம்)-இன் குரல் மீண்டும் மேற்கு வங்க சட்டமன்றத்தில் ஒலிக்கும்.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில், சிபிஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் சரியான நேரத்திலான தலையீடுதான், மக்களின் தீர்ப்பைச் சீர்குலைக்க பாஜக எடுத்த முயற்சிகளை முறியடித்தது. எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஆளுநர்கள் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியின் அரசியல் முகவர்க ளாகச் செயல்படுவதை நாம் காண்கிறோம். தமிழ்நாட்டிலும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நிலைமை மாறுபட்டதாக இல்லை. பாஜகவுடன் கூட்டணியமைத்துத் தேர்தலைச் சந்தித்த அதிமுக தலைமையிலான பெரும்பாலான கட்சிகளின் சுயநலக் கூட்டணியை உருவாக்குவதன் மூலம், ஆர்எஸ்எஸ்-க்கு சாதகமான ஒரு அரசாங்கத்தைப் பொறுப்பில் அமர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தனிப்பெ ரும் கட்சியின் தலைவர் ஆளுநரை பலமுறை சந்தித்து உரிமை கோரிய போதிலும், அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் தயங்கி யதை இத்தகைய நிகழ்வுப் போக்குகளின் பின்னணி யிலேயே பார்க்க வேண்டும். எனவே, தமிழ்நாட்டில் பாஜகவை உள்ளடக்கிய எந்தவொரு கூட்டணியும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதும், மாநிலத்தை பாஜக வின் நேரடி ஆட்சியான ஜனாதிபதி ஆட்சியின் கீழ் கொண்டு வராமல் தடுப்பதும் சிபிஐ(எம்)-இன் அவசியமான கடமையாக இருந்தது.

பிரதமரின் ‘சிக்கன’ நடவடிக்கைகள்

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே பிரதமரின் ‘சிக்கன’ நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியானது, இந்தியப் பொருளாதாரம் ஸ்திர மாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக பாஜக தலை மையிலான ஒன்றிய அரசு மீண்டும் மீண்டும் கூறி வந்ததன் போலித்தனத்தை அம்பலப்படுத்துகிறது. உருவாகி வரும் பொருளாதாரச் சூழல், மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல்கள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் அதன் கடுமையான தாக்கங்க ளால் உந்தப்பட்டு, வரவிருக்கும் பொருளாதார மந்த நிலையைச் சந்தேகத்திற்கு இடமின்றி சுட்டிக் காட்டுகிறது. நுகர்வைக் குறைத்துக் கொள்ளுமாறும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறும் சாதாரண மக்கள் மீது சுமையைத் திணிப்பதற்குப் பதிலாக, அமெ ரிக்கா தனது ராணுவ ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும் என்றும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோருவதில் மோடி அரசாங்கம் உலகளாவிய தெற்கு (Global South) நாடுகளுடன் இணைந்து நிற்க வேண்டும். ஒன்றிய அரசு இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி ஆதாரங்களைப் பன்முகப்படுத்தி, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டிருந்தால், நாடு இன்று இத்தகைய பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டி ருக்காது.

அடுத்த மாதம் விவசாயப் பருவம் தொடங்க உள்ள நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வது அவசர தேசிய முன்னுரிமையாக மாற வேண்டும். உர விநியோகத்தில் ஏற்படும் எந்தவொரு சீர்குலைவும் உணவு உற்பத்தியைப் பாதிக்கும், அது கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதா ரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும்; வாழ்வி யல் நெருக்கடியை ஆழமாக்கும். உர விநியோ கத்தைப் பாதுகாப்பதற்கும் அவற்றை தாமதமின்றி விநியோகிப்பதற்கும் ஒன்றிய அரசு உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். மாறாக, மோடி அரசாங்கம் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியுடன் முழுமையாக இணைந்து கொண்டு நாட்டின் பொருளாதார நலன்க ளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது; ஈரான் மீதான அவர்களின் ஆக்கிரமிப்பு இன்று இந்தியா எதிர் கொள்ளும் பொருளாதாரச் சிரமங்களுக்கு நேரடியா கப் பங்களித்துள்ளது. இத்தகைய வளர்ந்து வரும் பொருளாதாரப் பலவீனங்கள், தவறான தகவல்கள் மற்றும் ஏமாற்று வேலைகள் மூலம் தேர்தல் ஆதாயங்களைப் பெறுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தேர்தலுக்கு முன்னதாக பொதுமக்களி டமிருந்து திட்டமிட்டு மறைக்கப்பட்டன.

தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள்

தேர்தல் முடிவுகள் வெளியாகி வெறும் நான்கு நாட்களேயான நிலையில், மத்திய விதிகளின் அறிவிப்பு மூலம் தொழிலாளர் தொகுப்புச் சட்டங்க ளை நடைமுறைப்படுத்த எடுத்த முடிவு, பாஜக தலை மையிலான ஒன்றிய அரசின் ஏமாற்று வித்தையை மேலும் அம்பலப்படுத்துகிறது. இந்தத் தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை 2026 ஏப்ரல் 1 முதல் அமல் படுத்த அரசாங்கம் உத்தேசித்திருந்த போதிலும், சட்ட மன்றத் தேர்தல்கள் முடியும் வரை அந்த அறிவிப்பை அது திட்டமிட்டு ஒத்திவைத்தது. இதன் மூலம், நியாயமான குறைந்தபட்ச ஊதியம், மனிதநேயமிக்க வேலை நேரம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைச் சூழலைக் கோரி தொழிலாளர்கள் நடத்திய பரவலான போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஒன்றிய அரசு புறக்கணித்துள்ளது. இது பாஜகவின் தொழி லாளர் விரோதப் போக்கை மீண்டும் ஒருமுறை அடிக் கோடிட்டுக் காட்டுகிறது. இச்சூழலில், புதிதாக அறி விக்கப்பட்டுள்ள மத்திய விதிகளைத் தற்போதைய வடிவத்தில் அமல்படுத்துவதற்குப் பதிலாக, இந்திய அரசியலமைப்பின் கீழ் தங்களுக்கு வழங்கப் பட்டுள்ள சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் பொருத்தமான திருத்தங்களைக் கொண்டு வரவும், தொழிலாளர்க ளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மாநில அரசுக ளுக்கு சிபிஐ(எம்) அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக, தேசிய தலைநகர் பிராந்தியம் (NCR) முன்னெப்போதும் இல்லாத வகை யில் தன்னிச்சையான தொழிலாளர் வர்க்கப் போராட் டங்களின் அலையைக் கண்டுள்ளது. இந்த எதிர்ப்புகள் முக்கியமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா துறை யில் பணிபுரிபவர்களால் வழிநடத்தப்பட்டன, அவர் களில் பலர் சமீபத்திய ஆண்டுகளில் வேலைவாய்ப்பில் நுழைந்த இளம் தொழிலாளர்கள் ஆவர். பெரும்பா லான நிகழ்வுகளில், இந்தத் தீவிரப் போராட்டங்கள், நிறுவப்பட்ட தொழிற்சங்கங்களின் தலைமையின்றி இயல்பாகவே உருவெடுத்தன. அரசு ஒடுக்குமுறை யைக் கையாண்டது, இதன் விளைவாக நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர், அவர்களில் பலர் இன்னும் சிறையில் உள்ளனர். இருப்பினும், இந்த போராட்டங்களின் அளவும் உறுதியும், அவை ஈர்த்த தேசிய அளவிலான கவன மும், அந்தந்த மாநில அரசுகளைக் குறைந்தபட்ச ஊதிய உயர்வை அறிவிக்கக் கட்டாயப்படுத்தின, இருப்பினும் அந்தத் திருத்தங்கள் இன்னும் போதுமானதாக இல்லை.

மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் பாதிக்கப் பட்டுள்ள இத்தகைய கொந்தளிப்பான காலக்கட்டத் தில், செங்கொடி மட்டுமே மக்களுக்கு உண்மையான ஆறுதலாக இருக்கும். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் அளித்த பின்னூட்டங்களின் அடிப்படையில், மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளை நாம் புதிய வீரியத்துடன் கையில் எடுப்போம். அனைத்து சவால்களுக்கும் மத்தி யில் கட்சி மேலும் வளர்ச்சியடைவதை உறுதி செய்வ தற்கான திருத்த நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம்.