வீடு வீடாகச் சென்று திமுக சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிக்க வேண்டும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள்
4 Apr 2026, 4:02 pm
<p><strong>வீடு வீடாகச் சென்று திமுக சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிக்க வேண்டும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள்</strong></p>
<p>சிதம்பரம், ஏப். 4- அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று திமுக அரசு செய்த சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார். புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், முன்னாள் எம்எல்ஏ துரை. கி. சரவணன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை கூட்டணிக் கட்சியினருக்கு அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி சேத்தியாத்தோப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேட்பாளர் சரவணனை அறிமுகப்படுத்தி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது: "கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு தமிழகத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, புவனகிரி தொகுதியிலும் பல வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக முதல்வரின் சாதனைகளை மக்கள் மத்தியில் வீடு வீடாகக் கொண்டு சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வேண்டும். மக்களைச் சந்தித்தால் வெற்றி நிச்சயம் என்றார்." இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் சபாநாயகம், பாலு, மதி யழகன், வெற்றிவேல், ராயர் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சித்தார்த்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வாஞ்சி நாதன், ஒன்றியச் செயலாளர்கள் செல்லையா, காளிகோவிந்தராசு ஆகி யோர் பங்கேற்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அரங்கத் தமிழ் ஒளி, தேமுதிக மாவட்டச் செயலாளர் உமாநாத், மண்டலச் செயலாளர் செல்லப்பன், மாநில நிர்வாகி அறவாழி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செய லாளர் வி.எம். சேகர், மதிமுக மாவட்டச் செயலாளர் குணசேகரன், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பூ.சி. இளங்கோவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு பேசினர். இக்கூட்டத்தில் கம்மபுரம், கங்கை கொண்டான், ஸ்ரீமுஷ்ணம் (திருமுட்டம்), புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கீரப்பாளை யம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.</p>
