முந்தய பக்கம்

எம்.என்.காளியண்ணன் நினைவு நாள் பொதுக்கூட்டம்

18 Jan 2026, 4:50 pm
எம்.என்.காளியண்ணன் நினைவு நாள் பொதுக்கூட்டம்
<p><strong>எம்.என்.காளியண்ணன் நினைவு நாள் பொதுக்கூட்டம்</strong></p> <p>ஈரோடு, ஜன. 18- உழைப்பாளி மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தோழர் எம்.என்.காளியண்ணன்-னின் &nbsp;30 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. &nbsp;ஒன்றுபட்ட கோவை மாவட்டம், பின் னர் ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம் &nbsp;மற்றும் பவானி வட்டத்தில் விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள், உழைப்பாளி மக்கள் உரிமைகளுக்காக போராடியவர் தோழர் எம்.என்.காளி யண்ணன். இவரின் நினைவு நாள் &nbsp;ஜன.17 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது. தொடர்ந்து, அவரது நினைவு &nbsp;நாளையொட்டி ஓசைப்பட்டி பகுதி யில் ஞாயிறன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் கிளைச் செயலாளர் ஓ.எஸ்.பாட்டையன் தலைமை வகித்தார். ஓ.ஆர்.கந்த சாமி வரவேற்றார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், திண்டுக்கல் நாடா ளுமன்ற உறுப்பினருமான ஆர்.சச்சி தானந்தம் சிறப்புரையாற்றினார். மூத்த &nbsp;தலைவர் கே.துரைராஜ், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் பி.பி.பழனி சாமி, ஆர்.விஜயராகவன், எஸ்.வி.மாரி முத்து, அந்தியூர் தாலுகா செயலா ளர் ஆர்.முருகேசன், பவானி தாலுகா &nbsp;செயலாளர் ஆர்.பிரகாஷ், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மாணிக்கம், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஏ.கே.பழனிசாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கீதா, &nbsp;தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி ஆகி யோர் பேசினர். இந்நிகழ்ச்சியில் ஏ.எம். காதர் நினைவு விடியல் கலைக்குழு வினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற் றன. பவானி மற்றும் அந்தியூர் கமிட்டி கள் சார்பில், கட்சி வளர்ச்சி நிதி அளிக் கப்பட்டது. நிறைவாக ஓ.பி.பாட்டப் பன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram