தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடுவதால் ஜனநாயகம் தோற்கிறது : மு.வீரபாண்டியன்

12 Nov 2026, 8:58 pm
உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடுவதால் ஜனநாயகம் தோற்கிறது : மு.வீரபாண்டியன்

உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடுவதால் ஜனநாயகம் தோற்கிறது : மு.வீரபாண்டியன்

சிவகங்கை, நவ. 12 –தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப் போடுவதன் மூலம் ஜனநாயகம் தோற்கடிக்கப் பட்டு வருவதாகவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங் களைப் பரவலாக்கத் தமிழக அரசுஉடனடியாகத் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தி யுள்ளார்.

சிவகங்கையில் வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அதிகரித்து வரும்வன்முறை மற்றும் போதைப் பொருள் கலாச்சாரம் கவலை யளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும், நேர்மையானஅதிகாரிகளுக்கு முழுச் சுதந்திரம் வழங்குவதோடு சிறு, குறு தொழில்களை ஊக்குவித்து வேலைவாய்ப்பைஅதிகரிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தைச் சட்டம்-ஒழுங்கு பாதித்த மாநிலமாகச் சித்தரிக்க முயலும் ஆளுநர் மற்றும் ஒன்றிய அரசு, முதலில்உத்தரப்பிரதேச மாநிலத்தின் நிலைமையைக் கவனிக்க வேண்டும் என அவர் சாடியுள்ளார். மேகதாது அணை விவ காரத்தில் பிரதமர் தலையிட்டுத் தமிழகத்தின் உரிமையான நீரைப் பெற்றுத் தர வேண்டும்என்றும், சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்கும் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றும் அவர்கேட்டுக்கொண்டுள்ளார்.

புத்தகக் கொள்முதல் ஊழல் புகார் மற்றும் பெண் அதிகாரி குறித்த தவெக எம்.எல்.ஏ-வின் வாட்ஸ்அப் பதிவுகுறித்து அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரபாண்டியன்வலியுறுத்தியுள்ளார். மேலும், எஸ்.ஐ.ஆர் (SIR) நடவடிக்கை மூலம் வாக்குகள் பறிக்கப்பட்டது குறித்து முதலமைச்சர்விஜய் தனது நிலைப்பாட்டைத் தெளிவு படுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.