தேர்தல் ஆணையம் தோற்று விட்டது! மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு
6 Oct 2026, 9:45 pm

தேர்தல் ஆணையம் தோற்று விட்டது! மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

சென்னை, அக். 6 -தேர்தல் ஆணையம் தோற்று விட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுஉள்ளார்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல் பணிகளில் ஈடுபட்ட பணியாளர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி செவ்வாயன்று (அக்.6) சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மு.வீரபாண்டியன், “கடந்த ஆட்சியில் செவிலியர்கள் நடத்திய போராட்டத்தில் பேசிய இன்றைய அமைச்சர்கள், ஆட்சிக்கு வந்ததும் நிரந்தரம் செய்வோம் என்ற வாக்குறுதி அளித்தனர். அதனை நிறைவேற்ற வேண்டும். மாறாக, தற்போது போராடுகிற செவிலியர்களை தவெக அரசுதான் கைது செய்துள்ளது” என்றார்.

இடைத்தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை, மின்வெட்டு, எந்திரங்கள் பழுதடைந்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தோற்றுவிட்டது; தனது கடமையை செய்யவில்லை. இந்திரஜித்குப்தா குழுவின் தேர்தல் சீர்திருத்தம் குறித்த முன்மொழிவுகளை அரசு பரிசீலிக்க வேண்டும்” என்றார்.