கம்யூனிஸ்டுகள் அரசியல் விமர்சனங்களை வரவேற்பவர்கள் கடலூரில் மு. வீரபாண்டியன் பேட்டி
26 Jun 2026, 11:35 pm

கம்யூனிஸ்டுகள் அரசியல் விமர்சனங்களை வரவேற்பவர்கள் கடலூரில் மு. வீரபாண்டியன் பேட்டி

கடலூர், ஜூன் 26- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கடலூரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறிய தாவது: "ஜனநாயகத்தின் அடித் தளமே விமர்சனம் தான். கம்யூ னிஸ்டுகள் அரசியல் விமர்ச னங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் வரவேற்போம்; அதனைத் திறம்பட எதிர்கொள்வோம். ஆனால், விமர்சனங்கள் தனிநபர் தாக்குதலாகவோ அல்லது அந்தரங்கத்தைப் பறிப்பதாகவோ இருக்கக்கூடாது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் ஒரு போராளி. அவர் மீது தற்போது வைக்கப்படும் விமர்சனங்கள் ஏற்புடைய தல்ல; இடதுசாரிகள் இதனை உறுதியுடன் எதிர்கொள்வார்கள்.

" தெருவோர வியாபாரிகள் "

தமிழ்நாடு முழுவதும் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுத்து வருகிறது. கடலூரில் ஆக்கிர மிப்பு என்ற பெயரில் வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் ஒப்படைக்க வேண்டும்; அவர்களைப் பாதுகாக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.

" ஹைட்ரோ கார்பன் திட்டம் "

பரங்கிப்பேட்டை கடற்கரையோரம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த முயல்வது ஏற்கத்தக்கதல்ல. இத்திட்டத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் மாசுபடும். எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்." "கடலூர் மாவட்டம், பேரிடர் காலங்களில் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய மாவட்டமாகும். எல்-நினோ பாதிப்பு குறித்து ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள நிலை யில், கடும் மழை மற்றும் வெள்ளத்தைச் சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்." கோரிக்கைகள் "உள்ளாட்சி அமைப்புக ளுக்குக் கூடுதல் அதிகாரங்களை யும் நிதியையும் வழங்கி, அவற்றைத் தன்னாட்சியுடன் செயல்பட வைக்க வேண்டும். மேலும், விருத்தாச்சலத்தைத் தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்." "விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் 29-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஒன்றிய அரசு தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை விடுவிக்க வேண்டும். காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 6 முதல் 15-ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபயணப் போராட்டம் மேற்கொள்ள உள்ளோம்.

" பொதுத்துறை நிறுவனங்கள் "

என்.எல்.சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் சொத்து; அவை அடுத்த தலைமுறைக்கானவை. பொருளாதார நெருக்கடியின் போது நாட்டைத் தாங்கிப் பிடிப்பதே இந்த நிறுவனங்கள்தான். கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்குத் தாரை வார்க்கும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களை விற்பதை ஏற்க முடியாது.

" சட்டம்-ஒழுங்கு "

புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் மட்டுமே முடிந்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதற்குக் கால அவகாசம் தேவையில்லை. பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான தாக்குதல்களைக் கட்டுப்படுத்த ஊர்தோறும் பாதுகாப்பு அரணுகளை உருவாக்க வேண்டும். பெண்களைப் பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகும்." இவ்வாறு மு. வீரபாண்டியன் கூறினார்.