அமலாக்கத்துறை சோதனை அரசியல் பழிவாங்கல்! மு. வீரபாண்டியன் கண்டனம்
28 May 2026, 9:44 pm

அமலாக்கத்துறை சோதனை அரசியல் பழிவாங்கல்! மு. வீரபாண்டியன் கண்டனம்

விழுப்புரம், மே 28 - கேரள முன்னாள் முதல்வ ரும் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான பினராயி விஜயன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் குற்றம் சாட்டினார்.

புதன்கிழமை விழுப்புரம் வருகை தந்த மு. வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: “கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது ஏற்கத்தக்கதல்ல.

சட்டப்படி யார் வீடுகளில் வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம் என்று கூறினாலும், 12 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவைச் சேர்ந்த எந்தவொரு தலைவர் வீட்டிலாவது இதுவரை சோதனை நடத்தப்பட்டுள்ளதா? இதற்கு ஒன்றிய அரசு பதில் சொல்ல வேண்டும்.

அமலாக்கத்துறை சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்த பிறகு, சம்பந்த ப்பட்ட நபர்கள் பாஜக-வில் இணைந்தால் அவர்கள் குற்ற மற்றவர்களாகி விடுகிறார்கள். இதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளன.

இது அப்பட்ட மான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இத்தகைய நாடுகளில் இத்தகைய பழிவாங்கும் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படு வது வேதனையானது.

தோழர் பினராயி விஜயன் வீட்டில் நடந்த சோதனையும் ஒரு அரசியல் பழிவாங்கல் தான். நாடு முழுவதும் உள்ள இடதுசாரித் தலைவர்களின் வீடுகளில் இன்னும் எத்தனை ஆண்டுகள், எத்தனை முறை சோதனை நடத்தினாலும், அங்கு எந்தவொரு தேசவிரோதப் பொருட்களையும் கண்டெடுக்க முடியாது.

கட்சி வழங்கும் நிதியில்தான் ஊழியர்களும் தலைவர்களும் வாழ்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் சோதனை செய்தால், அங்கு புத்தகங் களைத்தான் எடுக்க முடியும்.

அதில் சேகுவேரா, ஏங்கல்ஸ், லெனின், பெரியார், அம்பேத் கர், காந்தி உள்ளிட்ட தேசத் தலைவர்களின் புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும்.

அந்தப் புத்தகங்களை யாவது எடுத்துச் சென்று படித்தால், சோதனை நடத்துபவர்களுக்குக் கொஞ்சம் சிந்தனையும் அறிவும் வரும்.

இடதுசாரித் தலைவர்களின் வீடுகளில் இது தவிர வேறு எதுவும் கிடைக்காது.

எனவே, இந்தச் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை; இதனை எவ்வகையிலும் ஏற்க முடியாது.” இவ்வாறு மு. வீரபாண்டியன் கூறினார்.

இந்தச் சந்திப்பின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ. சவுரிராஜன், மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் முருகன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பாரதி, மாநிலக் குழு உறுப்பினர் தினேஷ், நகரச் செயலாளர் அகத்தியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.