தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அநீதியை கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் வேடிக்கை பார்த்ததில்லை சமரசமற்ற மக்கள் போராளிகளை சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள்!

22 Sept 2026, 9:42 pm
அநீதியை கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் வேடிக்கை பார்த்ததில்லை  சமரசமற்ற மக்கள் போராளிகளை சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள்!

அநீதியை கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் வேடிக்கை பார்த்ததில்லை சமரசமற்ற மக்கள் போராளிகளை சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள்!

மதுராந்தகத்தில் மு. வீரபாண்டியன் பிரச்சாரம்

மதுராந்தகம், செப். 22 -செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி. சுகந்திக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், இடதுசாரிகளின் மேன்மையை விளக்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர் சந்திப்பிலும் பங்கேற்ற அவர், இடதுசாரிகளை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்என்பதையும், கம்யூனிஸ்டுகள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுப்பிய கேள்விக்கான பதிலையும் விரிவாக முன்வைத்தார்.

மக்கள் பேரராளிகள்

பட்டப்படிப்பு படித்து, ஆய்வுப்பணிகள் மேற்கொண்டு, உழைக்கும் ஏழை மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களுக்காகவும் களமாடி வழக்குகளை எதிர்கொண்ட போராளி பி. சுகந்தியை மதுராந்தகத்தில் வேட்பாளராக நிறுத்தியுள்ளதாக வீரபாண்டியன் தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் இடங்களுக்கே சென்று துயர் அறிந்து இணைந்துபோராடியதால் நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிய

போராளியை இந்த இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியிருப்பதாகவும், தங்களோடே வாழும் வேட்பாளர் பி. சுகந்திக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். சுகந்திக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரச்சின்னத்திலும், தாராபுரத்தில் போட்டியிடும் கட்டடத் தொழிலாளி லட்சுமணனுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

“நான்கு பேராக இருந்தாலும் சமரசமில்லை”

சட்டமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் நான்கு பேர் மட்டுமே இருந்தாலும், சமரசமின்றி ஒன்றிய அரசைஎதிர்ப்பதாகவும், தொழிலாளி வர்க்கம், கூலி விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தமிழ்நாட்டின் நலன் சார்ந்த குரலாகவே இடதுசாரிக் கட்சிகள் குரல் தொடர்ந்து ஒலிக்கும் எனவும் வீரபாண்டியன் தெரிவித்தார். நாடுகடந்த நிறுவனங்கள் நாட்டைச் சூறையாடுவதாகவும், ஒன்றிய அரசு, ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சி நடத்த முயல்வதாகவும் குற்றம்சாட்டிய அவர்,சட்டமன்றத்தில் இடதுசாரிகளின் பலத்தை உயர்த்த மதுராந்தகம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆதவ் அர்ஜுனாவுக்கு பதில்

கம்யூனிஸ்டுகள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுப்பிய கேள்வியே மிகத் தவறானது, பிழையானது என்று வீரபாண்டியன் தெரிவித்தார். நூற்றாண்டு கால அரசியல் வாழ்வில் கம்யூனிஸ்ட்டுகள் ஒருபோதும் கையேந்தி நிற்கவோ, கைகட்டி வேடிக்கை பார்க்கவோ இல்லை என்றும், நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் ஊழலுக்காக கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் கூட இந்த நூறு ஆண்டுகளில் தண்டிக்கப்பட்டதில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், இதை ஆதவ் அர்ஜுனாவும் அவரது சகாக்களும் நேரம் கிடைக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், முதலமைச்சருக்கும் அதைச் சொல்ல வேண்டும் என்றும் கூறினார். விமர்சனங்களை வரவேற்பதாகவும், ஆளும் வர்க்கத்தின் எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ளும் அரசியல் ஆற்றல் கம்யூனிஸ்டுகளிடம்உள்ளது எனவும், அமைச்சர் பொறுப்பில்இருப்பவர்கள் குற்றச்சாட்டு வைக்கும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தவெகவுக்கு ஆதரவு கட்சியின் முடிவு

தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தது ஜனநாயகத்திற்காக கட்சி எடுத்த முடிவு எனவும், மக்கள் தீர்ப்பை மதிப்பதற்காகவும், ஆளுநர் அதிகாரம் செலுத்துவதைத் தடுக்கவும் மட்டுமே இது எனவும் வீரபாண்டியன் தெளிவுபடுத்தினார். ஆதரவு அளிப்பதும் விலக்குவதும் கட்சியின் முடிவே தவிர தனது அதிகாரம் இல்லை என்றும், அமைச்சரவையில் இல்லாமல் வெளியிலிருந்து ஆதரவளிப்பதே தவிர, ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார். அரசு மதச்சார்பற்ற நிலையிலிருந்து விலகினாலோ, ஒன்றிய அரசுடன் இணைந்து சென்றாலோ, அப்போது கட்சி உரிய முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.

அரசியல் அரங்கம் அமைதியாக இருந்தபோது, வேறொரு அணியில்வெற்றி பெற்றிருந்தாலும் ஜனநாயகத்தைகாக்கச் சீர்தூக்கிப் பார்த்தே முடிவு எடுத்ததாக அவர் கூறினார். ஆட்சி நடவடிக்கைகளை தவறென்றால் விமர்சிப்போம், சரியென்றால் ஆதரிப்போம் என்றும், கடந்த ஆட்சியில் தொகுதி உடன்பாடு மட்டுமே இருந்ததால் அதன் தவறுகளுக்குத் தாங்கள் பதிலளிக்க வேண்டியதில்லை எனவும், தவெக செய்யும் தவறுகளுக்கும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அக்கட்சி மட்டுமே பதிலளிக்கநேரிடும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.