ஏப். 17 - கீழ்வேளூரில் மு. வீரபாண்டியன் பரப்புரை!
9 Apr 2026, 5:30 am

ஏப். 17 - கீழ்வேளூரில் மு. வீரபாண்டியன் பரப்புரை!

சென்னை, ஏப். 8 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியனின் தேர்தல் பரப்புரை பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஏப்ரல் 9 முதல் பல்வேறு தொகுதிகளில் அவர் பரப்புரை செய்கிறார். ஏப். 17 அன்று நாகப்பட்டினம், கீழ்வேளூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் மு. வீரபாண்டியன் பரப்புரை மேற்கொள்கிறார்.

ஏப். 18 முதல் காரைக்குடி, மதுரை, விழுப்புரம் வழியாகச் சென்று ஏப். 21 அன்று சென்னையில் தனது பரப்புரையை அவர் நிறைவு செய்கிறார்.