தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டமன்றத் தேர்தலில் ம.நீ.ம. போட்டியில்லை; திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு!

24 Mar 2026, 3:23 pm
சட்டமன்றத் தேர்தலில் ம.நீ.ம. போட்டியில்லை; திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு!

சட்டமன்றத் தேர்தலில் ம.நீ.ம. போட்டியில்லை; திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு!

சென்னை, மார்ச் 24 - 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்த லில் மக்கள் நீதி மய்யம் நேரடி யாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணி யின் வேட்பாளர்களை நிபந்தனை யின்றி ஆதரிப்பதாகவும் அக்கட்சி யின் தலைவர் கமல்ஹாசன் அறிவித் துள்ளார். சென்னை அண்ணா அறிவால யத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலி னை, கமல்ஹாசன் நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, இந்த முடிவை திறந்த மனதுடன், தெளிந்த உள்ளத்துடனும் அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக இதுதொடர்பான அறிக்கை ஒன்றையும் கமல்ஹாசன் வெளியிட்டார்.  அதில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இரண்டு கட்டமாக நடைபெற்றதாக வும், அப்போது, இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், ம.நீ.மய்யத்திற்கு தருவதாக கூறிய தொகுதி எண்ணிக்கையும், உதய சூரியன் சின்னத்தில்  போட்டியிட வேண்டும் என்ற  பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பி னர்களுக்கும் தனக்கும் ஏற்புடையதாக இல்லை என்று தெரிவித்த கமல் ஹாசன், “தமிழ்நாட்டின் உரிமை கள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, தமிழ் மக்களின் நலன்கள் புறக் கணிக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடி யான சூழலில், எங்கே எங்கள் பங்கு என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “இது தியாகம் அல்ல:  கடமை. சுய நலம் அல்ல; பொறுமை;  முதல்வர் அன்போடு அளிப்பதை பெரு மையோடு மறுப்பதும் அன்பின்  வடிவமே” என்று கூறியிருக்கும் கமல் ஹாசன், “தங்கள் குடும்பத்துக்காக எத்தனையோ பேர் தன் வீட்டை விட்டு,  ஊரை விட்டு, நாட்டை விட்டு எண்ணற்ற தியாகங்களை செய்கிறார்கள். தமிழ் நாடுதான் என் குடும்பம். நான் சீட்டுகளை விட்டுக்கொடுத்திருக் கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். “மிக விரைவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பதவி யேற்பு விழாவில் அவரை மகிழ்ச்சி யோடு நாம் சந்தித்து வாழ்த்துவோம் எனும் நம்பிக்கை எனக்கு முழுமை யாக இருக்கிறது” என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.