களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் அரிமளம் தந்த துணிச்சல்கார போராளி - ஜி.ராமகிருஷ்ணன்
7 Jun 2026, 9:12 pm

களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் அரிமளம் தந்த துணிச்சல்கார போராளி - ஜி.ராமகிருஷ்ணன்

தமிழ்நாடு அரசு போக்கு வரத்துத் துறையில் தொழிலாளியாகச் சேர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து சக தொழிலாளர்களுக்கா கவும் பொதுமக்களுக் காகவும் தங்கள் உழைப்பை ஈந்தவர்களில் ஒருவர் தோழர் எம். மாயாண்டி. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் தாஞ்சூர் கிராமத்தில் ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் 1942-இல் பிறந்தவர்.

கிராமப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு வரை படித்தவர், படிப்பைத் தொடர இயலாமல் சென்னைக்கு வந்தார். சில ஆண்டுகள் வீட்டு வேலை செய்தார். 1960-இல் ஒரு ஹோட்டலில் கிளீனர் வேலையில் சேர்ந்தார். நண்பர்களின் ஆலோசனைப்படி ஓட்டுநர் பயிற்சி எடுத்துக் கொண்டு சான்றிதழ் பெற்றார்.

1966-இல் அன்றைய மதராஸ் மாநில போக்குவரத்துத் துறை (எம்.எஸ்.டி.சி.) ஓட்டுநராக அடையாறு பணிமனையில் சேர்ந்தார். அப்போது அங்கே பணியாற்றி முன்னணித் தலைவர்களாக உரு வெடுத்த ஓட்டுநர் சந்திரன், நடத்துநர் ரைமண்ட் ஆகியோரை இத்தொடரில் சந்தித்திருக்கிறோம்.

சங்கம் எதிர்கொண்ட கெடுபிடிகள் திமுக ஆதரவாளரான மாயாண்டி, தோழர் வி.பி. சிந்தன் தலைமையிலான போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினரானார். சங்க நடவடிக்கைகளிலும் பங்கேற்றார். அக்கா லத்தில் செங்கொடி சங்கத்தை நிர்வாகம் அங்கீ கரிக்கவில்லை. நிர்வாகக் கெடுபிடிகளையும் ஆளுங்கட்சியினரின் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு சங்கம் செயல்பட்டது.

மாயாண்டி போர்க்குணம் மிக்க தொழிலாளியாக இயங்கினார். அரசுப் பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளுக்கு மேல் 25 பேர் வரை பயணிக்க லாம் என நிர்வாகம் முடிவெடுத்தது. கூடுதல் பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் நிலையில் விபத்துகள் ஏற்படு வதைக் கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப் பட்டது.

சங்கம் இம்முடிவைக் கறாராகச் செயல் படுத்த முடிவெடுத்ததோடு பயணிகளின் நல னுக்காகக் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமெனவும் அரசை வலியுறுத்தியது.

கூடு தல் பயணிகளை ஏற்றக்கூடாது என்ற முடிவை அரசாங்கமே உறுதியாகச் செயல்படுத்த வில்லை. மக்கள் நலன் கருதி இம்முடிவில் செங்கொடி சங்கம் உறுதியாக நின்றது. பணி நீக்கம் இதற்காக மாயாண்டி உள்ளிட்ட சில தொழி லாளர்கள் 1970-இல் இடைநீக்கம் செய்யப் பட்டனர். நிர்வாக உள்விசாரணையில் மாயா ண்டி 1972-இல் வேலையிலிருந்து நீக்கப் பட்டார்.

உண்மையில் நிர்வாகம் அவரை மேற்சொன்ன பிரச்சனைக்காக வேலைநீக்கம் செய்யவில்லை. செங்கொடி சங்கத்தில் அவருடைய தீவிர செயல்பாட்டை முடக்கவே அவரைப் பழிவாங்கியது. அதை எதிர்த்துச் சங்கத்தின் வழிகாட்டலில் வழக்குத் தொடுத்த மாயாண்டி, தொடர்ந்து கட்சியிலும் சங்கத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

1971 சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் களில் இந்திரா காங்கிரஸ் - திமுக கூட்டணியை யும் ஸ்தாபன காங்கிரஸ் அணியையும் எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிட்டது. சென்னையில் பேசின் பிரிட்ஜ் தொகுதியில் கட்சியின் வேட்பாளராகத் தோழர் கே.எம். ஹரிபட் போட்டியிட்டார். தேர்தல் பணியில் மாயாண்டி முழுமையாக ஈடுபட்டார்.

1960-களின் இறுதியிலும் 70-களின் தொடக்கத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி அன்றைய மாநில திமுக அரசின் மக்கள் விரோத நடவ டிக்கைகளையும் மத்திய காங்கிரஸ் அரசின் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த்து தொடர்ச்சியாக இயக்கம் நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்ட மாண வர்களும் இளைஞர்களும் பரப்புரைகளில் ஈடுபட்டனர்.

மாயாண்டி சென்னையில் கட்சிப் பணிகளிலும், சங்க வேலைகளிலும் முனைப்பாகப் பங்கேற்றார். 1970-இல் கல்கத்தாவில் நடைபெற்ற சிஐடியு அமைப்பு மாநாட்டில் போக்குவரத்து அரங்கப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். போராட்டக் களமாக சென்னை அக்காலத்தில் சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் வீரமிக்க போராட்டங்கள் நடந்தன.

சிம்சன் உள்ளிட்டுப் பல நிறுவனங்களில் நடை பெற்ற போராட்டங்களினால் மாநகரமே போரா ட்டக் களமாகத் திகழ்ந்தது. குக்கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்தவரான மாயாண்டிக்கு அந்தப் போராட்டங்கள் புதிய வெளிச்சத்தைக் காட்டின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தார்.

விலைவாசி உயர்வை எதிர்த்து கட்சி நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக மூன்று வாரம் சென்னை மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். மாநகரின் முன்னாள் மேயர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, தோழர்கள் பி.ஆர். பரமேஸ் வரன், வே. மீனாட்சி சுந்தரம், கே.எம். ஹரிபட், அ.சவுந்தரராசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களோடு சிறையிலிருந்து இயக்கப் பாடம் பயின்றதைப் பெருமையாகக் கருதுகிறார்.

தாக்கப்பட்ட சிந்தன் 1973-இல் பல நிறுவனங்களில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களில் தோழர் வி.பி. சிந்தன் முன்னணிப் பாத்திரம் வகித்தார். குறிப்பாக, சிம்சன் தொழிலாளர்கள் போராட்டம் பல மாதங்கள் தொடர்ந்தது.

நிர்வாகங்களும், மாநில அரசும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு முற்பட்டன.

தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர், கைது செய்யப்பட்டனர். 1973 ஜூலை 18-இல் மாதவரம் பால்ப ண்ணைத் தொழிலாளர் போராட்ட ஆதரவுக் கூட்டத்தில் பேசுவதற்காக அரசுப் பேருந்தில் சென்ற தோழர் வி.பி. சிந்தனை, மூலக்கடை பகுதியில் வழிமறித்த ஆளுங்கட்சி குண்டர்கள் அவர் மீது கொலைவெறித் தாக்குதல் தொடுத்த னர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை நடந்து நீண்டகாலப் பராமரிப்புக்குப் பிறகே அவர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். அவர் தொடர்ந்து இயக்கப் பணியாற்றிட உதவியாகக் கார் வாங்கப்பட்டது.

கட்சியின் முடிவிற்கிணங்க சுமார் 12 ஆண்டுகள் அந்தக் காரை ஓட்டும் பணியை தோழர் மாயாண்டி மேற்கொண்டார். முழுநேர ஊழியரான இவருக்கு மாத அலவன்ஸ் ரூ. 150. “தோழர் வி.பி.சி.க்குக் கார் டிரைவராகப் பணியாற்றிய வாய்ப்பு என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பாக்கியம்,” என நெகிழ்வோடு கூறுகிறார் மாயாண்டி.

மேலும், அகில இந்திய தலைவர்கள் பி.டி. ரணதிவே, ஜோதிபாசு போன்றவர்களுக்குக் கார் ஓட்டியதையும் நெகிழ்வோடு குறிப்பிட்டார். அவசரநிலை ஆட்சி 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திரா காந்தி தலைமையிலான அரசு அவசரநிலை ஆட்சியை அறிவித்து ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையிடப்பட்டனர். தமிழகத்தில் திமுக அரசு அவசரநிலை ஆட்சியை எதிர்த்தது.

1976 ஜனவரியில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. தோழர் வி.பி. சிந்தன் உள்பட மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் தலைமறைவாகச் செயல்படும் கட்டாயம் ஏற்பட்டது. வி.பி.சி.க்குக் கார் ஓட்டும் பணி தேவைப் படாத சூழலில் தோழர் மாயாண்டி வாழ்வாதா ரத்திற்காக வருமானம் ஈட்டிட வழக்கறிஞர் ச. செந்தில்நாதன் அவர்களை அணுகி ஆலோச னை கேட்டார்

. அவர் ஆட்டோ கூட்டுறவு சங்கத்தை அணுகித் தவணையில் ஆட்டோ வாங்கி ஓட்ட லாம் என்றும், அதற்கு முன்பணம் கட்டுவதற் காக இந்து என். ராம் அவர்களைச் சந்திக்கலாம் என்றும் ஆலோசனை கூறினார்.

மாயாண்டி ராம் அவர்களைச் சந்தித்து ரூபாய் 3,000 பெற்று, ரூ. 16,000 விலையில் ஆட்டோ வாங்கினார். தினமும் ரூ. 16 தவணை கட்ட வேண்டும். இவ்வாறாக ஆட்டோ ஓட்டுநராகச் செயல்பட்டுக்கொண்டே கட்சி, தொழிற்சங்கப் பணிகளில் இவர் ஈடுபட்டார்.

அவசரநிலை ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டு 1977 நாடாளு மன்றத்துக்கும் மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல்கள் நடைபெற்றன. மீண்டும் தோழர் மாயாண்டி வி.பி.சி.க்குக் கார் ஓட்டும் பணியை ஏற்றார். “ஆட்டோவை விற்று விட்டு என். ராமிடம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கப் போனேன், அவர் அதை வாங்க மறுத்துவிட்டார்” என்று நினைவுகூர்கிறார். வி.பி.சி. கார் ஓட்டுநராக..

. வி.பி.சி.க்குக் கார் ஓட்டுநராகப் பணியாற்றிய அனுபவத்தைப் பற்றி கேட்டபோது மாயாண்டி உணர்ச்சி பொங்கப் பேசினார். “பதற்றம் நிலவினாலும் போராட்டக் களத்திற்கு நேரடியாக அவர் சென்று விடுவார். 1977-இல் டி.வி.எஸ். நிறுவன தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் இணைந்து தங்கள் கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தத்தைத் தொடங்கினார்கள். பாடியில் டி.வி.எஸ். கம்பெனிக்கு எதிரில் பந்தல் போட்டுத் தொழிலாளர்கள் தர்ணா நடத்தி வந்தனர்.

அந்தப் பந்தலுக்கு நிர்வாகத்தின் அடியாட்கள் தீ வைத்தார்கள். சங்கத் தலைவர் என்ற அடிப்படையில் வி.பி.சி. போராடும் தொழிலாளர்களை சந்திப்பதற்காகக் காரில் போய்க்கொண்டிருந்த போது வில்லிவாக்கம் ரயில்வே கேட் அருகில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தடிகளுடன் நிற்பதைப் பார்த்த மாயாண்டி வி.பி.சி.யிடம் கூற, வி.பி.சி. காரைத் திருப்பியெடுத்து வேறு வழியாகக் கூட்ட இடத்திற்குச் செல்லுமாறு கூறினார். ரயில்வே கேட் அருகில் நிர்வாகம் ஏவிவிட்ட ஆட்கள் வி.பி.சி.யைத் தாக்குவதற்காகக் கூடியிருந்தது பிறகு தெரியவந்தது.

இவ்வாறு தொழிலாளர்கள் போராட்டத்தின்போது அவரைப் பாதுகாப்பாகப் போராட்டக் களத்திற்கு அழைத்துச் செல்கிற முக்கியமான பணியைச் செய்தேன்,” என்று தெரிவித்த மாயாண்டியின் குரலில் பெருமிதமும் நெகிழ்ச்சியும் கலந்திருந்தன.

நீதிமன்றத் தீர்ப்பு வேலையிலிருந்து நீக்கப்பட்ட மாயாண்டி சங்க ஆலோசனையின்படி தொடுத்த வழக்கில் லேபர் கோர்ட், சென்னை உயர்நீதிமன்றம் பாதக மான தீர்ப்பளித்தது. வழக்கறிஞர் வைகை உதவி யுடன் இறுதியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் இவருக்கு மீண்டும் வேலையளிக்க ஆணையிட்டது. 1970இல் துவங்கி, சளைக்காமல் 14 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி 1985-இல் மீண்டும் அரசுப் போக்குவரத்துத் துறையில் சேர்ந்தார்.

1968-இல் மாயாண்டி-அம்மணி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 மகள்கள். அவசரநிலை ஆட்சியின்போது காவல்துறை கெடுபிடி இருந்த காரணத்தினால் 1976-இல் மனைவியும் குழந்தைகளும் கிராமத்திற்குச் சென்றுவிட்டார்கள். 3 மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டிய பின்னணியில் 1988-ஆம் ஆண்டு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

உச்சநீதிமன்றத்தில் அவரது வழக்கு வெற்றி பெற்று கிடைத்த ஒன்றரை லட்சம் ரூபாயை மகள்களின் திருமணச் செலவுகளுக்குப் பயன்படுத்தினார். கிராமத்திற்குச் சென்ற பிறகும்... கிராமத்திற்குச் சென்ற பிறகும் கட்சி உறுப்பி னராகத் தொடர்ந்து பணியாற்றினார். கட்சிப் பணிக்கான அங்கீகாரமாக அரிமளம் ஒன்றி யக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் நடை பெறும் இயக்கங்களில் இன்றளவும் தவறாமல் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். வயது மூப்பின் அடிப்படையில் ஒன்றியக்குழுவிலி ருந்து விடுவிக்கப்பட்டுத் தற்போது கட்சி உறுப்பின ராகத் தன்னால் இயன்ற பணியைச் செய்து வருகிறார். “மாயாண்டி துணிச்சல்காரர். போராட்டத்தில் பங்கேற்கிறபோது பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாத ஒரு போராளி,” எனத் தோழர் சந்தி ரன் (போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தலை வர்களில் ஒருவராக இருந்தவர்) பெருமிதத்தோடு குறிப்பிட்டார். மாயாண்டியின் இணையர், 3 மகள்கள் கட்சியின் ஆதரவாளர்களாக உள்ள னர்.

மாயாண்டியின் இயக்கப் பணிக்கு உறுது ணையாக இருக்கிறார்கள். பேரன் அமரன் கிரா மத்தில் உருவாக்கப்பட்டுள்ள கட்சிக் கிளையில் துணைக்குழு உறுப்பினராக இணைந்திருக் கிறார். தற்போது 84 வயதாகும் தோழர் மாயாண்டி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்க ளித்து வரும் இயக்கப்பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.