தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எளியோரின் குரலாக சட்டமன்றத்தில் ஒலிப்பவர் மா.சின்னதுரை!

12 Apr 2026, 5:30 am
எளியோரின் குரலாக சட்டமன்றத்தில் ஒலிப்பவர் மா.சின்னதுரை!

எளியோரின் குரலாக சட்டமன்றத்தில் ஒலிப்பவர் மா.சின்னதுரை!

சிபிஐ மூத்த தலைவர் இரா.முத்தரசன் புகழாரம். புதுக்கோட்டை, ஏப்.11 - ஏழை, எளியோரின் குரலாக ஒலிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மா.சின்னதுரையை கந்தர்வகோட்டை தொகுதி மக்கள் இரண்டாவது முறையாக சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் இரா. முத்தரசன்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கந்தர்வகோட்டை தொகுதியில் போட்டியிடும் மா.சின்னதுரையை ஆதரித்து செவ்வாய்க்கிழமை அவர் பேசியதாவது: வெண்ணெயையும், கண்ணையும் எட்டிப்பிடி பழனிசாமியை வஞ்சகமாக கூட்டணியில் சேர்த்தது தமிழ்நாட்டில் பாசிச பாஜக அரசு மறைமுகமாக ஆளந்துடிக்கிறது.

ஒரு கண்ணில் வெண்ணெயும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் என்பதைப் போல பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிதியை வாரி வழங்குவதும் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதியை தற்ப்புவதும் தொடர்கதையாக உள்ளது. மகா பாரதத்தில் வரும் சகுனி போல தமிழ்நாட்டை கைப்பற்றி விடலாம் என மோடியும், அமித் ஷாவும் துடிக்கின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். புதிய வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார். மேலும், ரூ.1 ஆயிரம் மதிப்பிலான டோக்கன் திட்டத்தில் தேவையற்ற வீட்டு உபயோகப் பொருட்களை சம்பந்தப்பட்ட பயனாளிகளே வாங்கிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று உள்ளது.

மக்களின் பண்பாடு அறிந்து முதல்வர் திட்டங்களை தீட்டுகிறார். இந்த ஆட்சி மீண்டும் தொடர வேண்டும். இந்தத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கடந்த 5 ஆண்டுகளில் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஏழை எளிய மக்களின் குரலாக சட்டமன்றத்தில் ஒலிப்பவர். எனவே வேட்பாளர் மா.சின்னதுரைக்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.