கறம்பக்குடியில் ஆழ்குழாய் கிணறு அமைக்க எம்.சின்னதுரை எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
22 Feb 2026, 3:26 pm
<p><strong>கறம்பக்குடியில் ஆழ்குழாய் கிணறு அமைக்க எம்.சின்னதுரை எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்</strong></p>
<p>புதுக்கோட்டை, பிப்.22- தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கறம்பக்குடியில் ஆழ்குழய் கிணறு அமைக்கும் பணியை, கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலாளர் முத்துகிருஷ்ணன், பேரூராட்சித் தலைவர் முருகேசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜா, ராஜசேகரன், முகமது நியாஸ், கருப்பையா, ஞானசேகரன், ஞானச்சந்திர பிரபு, சதீஷ், மார்க்ஸ் அம்பேத்கர் சமூக பொருளாதார மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் ரஷ்யா, நித்யா, இளவரசி, சரண்யா, அமுத ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
