தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்

2 Apr 2026, 3:50 pm
சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்

சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் வியாழனன்று (ஏப்.2) ஜோதியம்மாள் நகரில் வாக்கு சேகரித்தார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர். ஆர்.எஸ்.கிருத்திகாதேவி புதனன்று (ஏப்.1)  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.விஜயா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகரராஜா போட்டியிடுகிறார். இதனையொட்டி புதனன்று (ஏப்.1) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருகம்பாக்கம் தொகுதி முன்னணி ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா பேசினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் ஏ.நடராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, சி.செங்கல்வராயன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி முன்னணி ஊழியர்கள் கூட்டம் செவ்வாயன்று (மார்ச் 31) நெற்குன்றத்தில் நடைபெற்றது. கட்சியின் பகுதி செயலாளர் டி.அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் காரம்பாக்கம் க.கணபதி பேசினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சு.வெள்ளைச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் வி.தாமஸ், திமுக மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் நொளம்பூர் வே.ராஜன், திமுக ஒன்றிய செயலாளர் துரை.வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்  எல்.சுந்தரராஜ் திமுக மாவட்டச் செயலாளர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை சந்தித்து ஆதரவு கோரினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.