முந்தய பக்கம்

கந்தர்வகோட்டையில் எம். சின்னதுரை வேட்பு மனு தாக்கல்!

6 Apr 2026, 4:15 pm
கந்தர்வகோட்டையில் எம். சின்னதுரை வேட்பு மனு தாக்கல்!
<p><strong>கந்தர்வகோட்டையில் எம். சின்னதுரை வேட்பு மனு தாக்கல்!</strong></p> <p>புதுக்கோட்டை, ஏப். 6 - &nbsp;மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கந்தர்வ கோட்டை (தனி) தொகுதியில் போட்டியிடும் எம். சின்னதுரை, திங்கட்கிழமையன்று தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக, கந்தர்வகோட்டை வெள்ளைமுனியாண்டவர் கோவில் திடலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற எழுச்சிப் பேரணி நடைபெற்றது. &nbsp;தோழமைக்கட்சி நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்கள், வெற்றி முழக்கங்களுடன் பேரணியாக வந்தனர். வரும் வழியில் அண்ணல் அம்பேத்கர், முன்னாள் முதல்வர் கலைஞர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் வருகை தந்த வேட்பாளர் மா. சின்னதுரை தேர்தல் நடத்தும் அலுவலர் ப. ரவியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் &nbsp;செய்தார். அவரது வேட்பு மனுவை திமுக ஒன்றி யச் செயலாளர் எம். பரமசிவம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் ஆகியோர் முன் மொழிந்தனர். திமுக ஒன்றியச் செயலாளர்கள் வி. முத்து கிருஷ்ணன், மா. தமிழய்யா, முன் னாள் ஒன்றியக்குழுத் தலைவர் மாலா ராஜேந்திரன், விசிக மாவட்ட செயலாளர் செந்தமிழ்வளவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. சாமுவேல் ராஜ், கே. அர்ஜுனன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி. நாகராஜன், எம். ஜெயசீலன், சாமி. நட ராஜன், வீ. அமிர்தலிங்கம், ஏ.வி.சிங்காரவேல் மற்றும் தோழமை கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட 5 ஆயிரத் திற்கும் அதிகமானோர் பங்கேற்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram