தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி லக்ஸர் ஆலைத் தொழிலாளர்களின் வீரமிக்க போராட்டமும் வெற்றியும்!
1 Oct 2026, 9:22 pm

தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி லக்ஸர் ஆலைத் தொழிலாளர்களின் வீரமிக்க போராட்டமும் வெற்றியும்!

வேலைநிறுத்தம் 64'

ஹரித்துவார்“தோழர்களே, நீங்களே சிந்தித்துப் பாருங்கள் — இந்த அதீத விலைவாசி உயர்வு காலத்தில் முறையான ஊதியமின்றி எங்களால் எப்படி குடும்பத்தை நடத்த முடியும்? இரவும் பகலும் இயந்திரங்களை இயக்கி எங்களின்உழைப்புச் சுரண்டப்படுகிறது. ஆனால், அதற்கான பலன் என்ன? ஹரித்துவார் மற்றும் அண்டைமாநிலமான ஹரியானா இடையேயானஊதிய வேறுபாடுகள் எங்களை அதலபாதாளத்தில் தள்ளுகின்றன. ஒப்பந்த தாரர்களின் முறைகேடுகளையும், நிர்வாகத்தின் ஒடுக்குமுறைகளையும்எதிர்த்து நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்!” — உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் சிட்குல் (SIDCUL) தொழில் மண்டலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘லக்ஸர்’ (Luxor) ஆலை வாயிலில் தொழிலாளர்கள் எழுப்பிய வர்க்கக் குரல் இதுவாகும்.இப்போராட்டத்தை ஒடுக்க நினைத்த நிர்வாகமும் காவல்துறையும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கை களைக் கண்டுகொள்ளாமல் மிரட்டல் களில் ஈடுபட்டன. இருப்பினும்,தொழிலாளர்களின் உறுதியான எழுச்சி அனைத்துதடைகளையும் தகர்த்தெறிந்துள்ளது.

ஹரித்துவாரில் வெடித்தவர்க்கக் கொந்தளிப்பு

இந்தியாவின் எழுது பொருட்கள் தயாரிப்புத் துறையில் 1963 முதல் முன்னணி வகிக்கும் லக்ஸர் குழுமம்,ஹரித்துவாரில் தனது ஆலையை நிறுவி உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்குத் தேவையான பொருட்களைத் தயாரித்து வருகிறது. இங்குள்ள 1,200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில்பெரும்பான்மையானோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். குறிப்பாக, இவர்களில் 40 சதவீதப் பெண் தொழிலாளர்களும் அடங்குவர்.ஹரித்துவார் தொழில் மண்டலத்தில் உள்ள மில்டன், ஜீனஸ், காம்பஸ் மற்றும்அகம்ஸ் ட்ரக்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆலைகளில் பரவிய தொடர் வேலைநிறுத்த அலை, லக்ஸர் ஆலைத் தொழிலாளர்களிடமும் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் உயர்த்தப்படாததும், மூன்றாம் தரப்பு ஒப்பந்த தாரர்கள் மூலம் ஊதியம் மற்றும் கூடுதல்பணிக்கான ஊதியம் முறையாக வழங்கப்படாததும் தொழிலாளர்களின் வர்க்கக் கோபத்தைக் கிளறியது. இதன் காரணமாக, 2026 மே 15 அன்று மாலையில் லக்ஸர் ஆலைத் தொழிலாளர்கள் அதிரடி வேலைநிறுத்தத்தில் குதித்தனர்.

ஆலை வாயில் முற்றுகையும் அடக்குமுறைகளும்

மே 16 அன்று காலை முதல் போராடும் ஒப்பந்தத் தொழிலாளர்களும், இன்முகாபி மஸ்தூர் கேந்திரா அமைப்பினரின் ஆதரவுடன் தொழிலாளர்களும் ஆலை வாயில்களை முற்றுகையிட்டனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. நிலைமையைச் சமாளிக்க முயன்ற காவல்துறை,தொழிலாளர்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.மே 17 அன்று பாரதீய நகரிக் சுரக்சா சன்ஹிதா சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போராட்டங்களைக் கட்டுப்படுத்த முயன்றனர். இருப்பினும், தொழிலாளர் கள் தங்கள் ஒருமைப்பாட்டைவிட்டுக் கொடுக்காமல் உறுதியுடன் போராடினர்.

முத்தரப்பு ஒப்பந்தமும் வென்றெடுக்கப்பட்ட உரிமைகளும்

நிர்வாகம் மற்றும் தொழிலாளர் தரப்பினருக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் சில முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டன:

• திருத்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியமுறை முறையாக அமல்படுத்தப்படு வதை உறுதி செய்தல்.

• ஒப்பந்ததாரர்கள் மூலம் ஊதியம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகைகள் உரிய காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்தல்.

• ஆலைகளுக்கு உள்ளேயே குறைகளைக் களைவதற்கான குழுக்களை (Grievance Redressal Committees) உருவாக்குதல்.

• பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இரவு நேரப் பணிகளின் போது ஜி.பி.எஸ் (GPS) வசதியுடன் கூடிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்புக் காவலர்களை வழங்குதல்.

கார்ப்பரேட் மற்றும் அரசு அடக்கு முறைகளையும் மீறித் தொழிலாளர்கள் தங்கள் ஒருமைப்பாட்டின் மூலம் வென்றெடுத்துள்ள இந்த ஊதியப் பலன்கள், உத்தராகண்ட் தொழில் வழித்தடத்தில் கார்ப்பரேட் அராஜகத்திற்கு எதிராக விழுந்த பலமான வர்க்க அடியாகும்.தி லெப்ட் வியூஸ்