மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட நுரையீரல்
9 Nov 2025, 2:37 pm
<p><strong>மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட நுரையீரல்</strong></p>
<p>சென்னை, நவ.9 – உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை க்குத் தேவையான நுரையீரலை அதி வேகமாக கொண்டு செல்வதில் சென்னை மெட்ரோ ரயில் முக்கிய பங்காற்றியுள்ளது. கடந்த சனிக்கிழமை பெங்களூரு விலிருந்து விமானம் மூலம் வந்த உறுப்பு மாற்று மருத்து வக் குழுவினர் மதியம் 2:07 மணிக்கு மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்தை அடைந்தனர். மெட்ரோ நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் விரைவான ஒருங்கிணைப்பால், ஏழு நிலையங்களைக் கடந்து மதியம் 2:28 மணிக்கு ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்தை அடைந்தது. வெறும் 20 நிமிடங்களில் நிறைவடைந்த இந்த அவசரப் பயணம் சாலை வழியை விட விலைமதிப்பற்ற நேரத்தை சேமித்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றியை உறுதி செய்வதில் பெரும் பங்காற்றியது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி திருத்தப்பட்ட மெட்ரோ ரயில்வே விதிகள் 2023-இன் கீழ் இது எளிதாக்கப்பட்டது.</p>
