லூலா வெற்றி: தீவிர வலதுசாரிகள் வீழ்த்த முடியாதவர்கள் அல்ல! - பேராசிரியர் விஜய் பிரசாத்
27 Oct 2026, 9:38 pm

லூலா வெற்றி: தீவிர வலதுசாரிகள் வீழ்த்த முடியாதவர்கள் அல்ல!

பிரேசிலில் 2026 அக்டோபர் 25க்கு முந்தைய வாரம்பரபரப்பின் உச்சத்தில் இருந்தது. 20 கோடிக்கும் அதிகமான பிரேசிலியர்கள் ஒவ்வொருவரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து ஏதேனும் ஓர் அரசியல் கருத்தோடு உலவுவது போலத்தோன்றியது. நாடு, அடிப்படையிலேயே இரு துருவங்களாகப் பிளவுபட்டிருந்தது. கருத்துக்கணிப்புகள் கடும் போட்டியைக் கணித்தன; பெரும்பாலானவை, முன்னாள்ஜனாதிபதி ஜெயிர் போல்சானரோவின் மகனும், தனித்த வகையிலான தீவிர வலதுசாரிகளின் தலைமை வேட்பாளருமான ஃபிளாவியோ போல்சானரோவுக்கே சாதகமாக இருந்தன. ஆனால், 2003 முதல் 2011 வரையிலும், 2023 முதல்இன்றுவரையிலும் ஜனாதிபதியாக இருக்கும் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, கருத்துக்கணிப்புகள் தன்னைத் தடுத்துநிறுத்த அனுமதிக்கவில்லை. நாடு முழுவதும் பயணம் செய்து, மிகப்பெரிய, எழுச்சிமிக்க பேரணிகளை நடத்தி மக்களை வாக்களிக்கத் திரட்டினார்.

கட்டாய வாக்களிப்பு உள்ள இந்த நாட்டிலும், முதல் சுற்றில் 21% வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை; வாக்களித்தவர்களில் கணிசமானோர் ஜனாதிபதி பதவிக்கானபகுதியை நிரப்பாமலோ, செல்லாததாக்கியோ விட்டுவிட்டனர். பதிவுசெய்யப்பட்ட 15.87 கோடி வாக்காளர்களில், முதல் சுற்றில் 47% பெற்றபோல்சானரோவுக்கும் லூலாவுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 22 லட்சம் வாக்குகளே. அக்டோபர் 4 (முதல் சுற்று) முதல் அக்டோபர் 25 (இரண்டாம் சுற்று)வரையிலான இடைவெளியில் வெல்ல வேண்டுமானால், போல்சானரோவுக்கு வாக்களித்தவர்களையோ, வாக்களிக்காதவர்களையும் செல்லாத வாக்கு அளித்தவர்களையும் தன் பக்கம் ஈர்க்க வேண்டிய நிலையில் இருந்தார் லூலா. பிரேசிலின்நவீன வரலாற்றில் இத்தகைய பின்னடைவிலிருந்து மீண்டு வந்த வேட்பாளர் வேறு யாருமில்லை. ஆனால், லூலா அதைச்சாதித்துக் காட்டினார்.

தெருக்களில் திரண்ட மக்கள் எழுச்சி

முதல் சுற்றுக்கும் இரண்டாம் சுற்றுக்கும் இடையிலான மூன்று வாரங்களில், லூலாவும் அவரது குழுவினரும் பெரிய நகரங்களில் மட்டுமல்லாமல், சிறிய ஆனால் முக்கியமான பல நகரங்களிலும் லட்சக்கணக்கான மக்களைத் தெருக்களில் இறக்கினர். இந்தப்பிரம்மாண்டமான மக்கள் திரள்கள், முதல் சுற்று எண்ணிக்கை ஏற்படுத்திய கணக்கீட்டுப் பின்னடைவை லூலாமுறியடிப்பார் என்ற நம்பிக்கையை உருவாக்கின. தேர்தல் புள்ளிவிவரப் பகுப்பாய்வுகள் அனைத்தும் இரண்டாம் சுற்றில்போல்சானரோ எளிதில் வெல்வார் என்றும், லூலாவுக்கு அது சாத்தியமற்றது என்றும் காட்டின. ஆனால் இடதுசாரிகள் இந்தப்பின்னடைவில் முடங்கிவிடாமல், அதிரடி ஆட்டத்தை தொடங்கினர்.முதல் சுற்றில் போல்சானரோ 22.2 லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருந்தார்; இறுதிச் சுற்றில் லூலா 44.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆக, வித்தியாசம் 66.6 லட்சம்வாக்குகளாக மாறியது. இந்த மாற்றம் பெரிய நகரங்களிலிருந்து வந்தது: பிரேசில் மக்கள்தொகையில் 57% பேர் வாழும், ஒரு லட்சத்துக்கும் அதிக மக்கள்தொகை கொண்ட 319 நகரங்கள், இந்த 66.6 லட்சம் வாக்குகளில் 38.9 லட்சத்தை அளித்தன. சுவிசேஷக் கிறிஸ்தவர்கள்அதிகம் வாழும், செல்வந்தர்கள் மிகுந்த, வெள்ளையினத்தவர் அதிகமுள்ள, கூடுதல் கல்வி பெற்ற, நகர்ப்புறப் பகுதிகளிலும் கூட லூலாவின் வாக்குகள் கூடுதலாக உயர்ந்தன.அதாவது போல்சானரோவின் ஆதரவுத் தளத்துக்்குள்ளேயே லூலா கணிசமாக ஊடுருவினார்; லூலாவின் சொந்தக் குழுவையே இது வியப்பில் ஆழ்த்தியது. இந்தத்திருப்புமுனையின் திறவுகோல், நிலமற்ற கிராமப்புறத் தொழிலாளர்கள் இயக்கம் (MST) முன்னின்று நடத்திய மக்கள்இயக்கங்களின் அணிதிரட்டலே.

சாதனைகளும் எல்லைகளும்

தமது மூன்று ஆட்சிக் காலங்களிலும் பிரேசில் மக்களின் சமூக நிலைமைகளில் அசாதாரண முன்னேற்றத்துக்கு லூலாதலைமை தாங்கியுள்ளார். போல்சா ஃபமீலியா (குடும்ப நிதியுதவித் திட்டம்), குறைந்தபட்ச ஊதிய உயர்வு, பொதுப்பல்கலைக்கழகங்களின் விரிவாக்கம், குடும்ப விவசாயத்துக்கான ஆதரவு ஆகியவை, ஆளும் வர்க்கம் நெடுங்காலமாக உதாசீனப்படுத்தி வந்த குடும்பங்களுக்கு உணவு, வருமானம், வாய்ப்புகளைக் கொண்டுசேர்த்தன. இவை லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றியதுடன், வறுமையை அரசின் பொது நடவடிக்கைகளால் எதிர்கொள்ள முடியும் என்பதையும் நிரூபித்தன.ஆனாலும், இந்த முன்னேற்றங்களைச் சாத்தியமாக்கிய அரசியல் சூத்திரம் தனது எல்லையை எட்டிவிட்டது. நிதித்துறை, விவசாய வணிகம், பிரேசிலிய மூலதனத்தின்ஆதிக்கப் பிரிவுகள் ஆகியவற்றின் அதிகாரத்தோடு இணக்கம் கண்டபடியே ஏழைகளின் வாழ்வை மேம்படுத்த லூலா முயன்றார். முதல் இரண்டு ஆட்சிக் காலங்களில், சாதகமான சர்வதேசச் சூழல் இந்த இணக்கத்துக்கு இடமளித்தது. ஆனால்,பொருளாதார அதிகாரத்தில் மாற்றம் இல்லாமல் செய்யப்பட்ட மறுபங்கீடு, ஏற்றத்தாழ்வின் அடித்தளத்தை அப்படியே விட்டுவைத்தது. பழைய அமைப்பால் பயனடைந்தவர்கள் மாற்றத்தைத் தடுக்கவும், பெற்ற நன்மைகளைத் திருப்பிப் பறிக்கவும்தேவையான வலிமையைத் தக்கவைக்க இது வழிவகுத்தது.மூன்றாவது ஆட்சிக் காலத்தில், நிதிக் கட்டுப்பாடுகள், கடுமையான வட்டியிலான கடன், பழமைவாத நாடாளுமன்றசக்திகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஆகியவை “சீர்திருத்தத்துக்கான” இடத்தைச் சுருக்கிவிட்டன. சமூக நலத்திட்டங்கள் இன்றியமையாதவையே; ஆனால் நிலையற்ற வேலைவாய்ப்பு, குடும்பங்களின் கடன்சுமை, போதாத பொதுச்சேவைகள், நிலம் மற்றும் செல்வக்குவிப்பு ஆகியவற்றை அவற்றால் மட்டும் வெல்ல முடியாது. இந்தச் சோர்வின் வேர், ஆட்சி உத்தியின்சமரசங்களே அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குக் குறுக்கே நிற்பதில் உள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதிகாரம் படைத்தோர் கோரும் சலுகைகளுக்கும்இடையிலான இடைவெளியை, லூலாவின் தனிப்பட்ட செல்வாக்கால் என்றென்றும் இட்டு நிரப்ப முடியாது.புதுப்பிக்கப்பட்ட திட்டத்துக்குத் தொழிலாளர்கள், விவசாயிகள், நகர்ப்புறப் புறநகர் மக்களின் அமைப்புரீதியான வலிமைதேவை. லூலாவின் ஆதரவுத் தளமான இவர்களுக்கே, நிலச்சீர்திருத்தம், பொது முதலீடு, தொழில் வளர்ச்சி, நிதித்துறைமீதான ஜனநாயகக் கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய செயல்திட்டத்தோடு, கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். தெருக்களை நிரப்பிய இயக்கங்கள், அரசின் திசைவழியைத் தீர்மானிக்கும் வலிமையைஇன்னும் அதிகம் பெற வேண்டும். தீவிர வலதுசாரிகளைத் தோற்கடித்தது அதற்கான வாய்ப்பைத் திறக்கிறது; ஆனால் லூலாகாலத்தின் சமூக நன்மைகளைப் பாதுகாக்க, அவற்றைத் தொடர்ந்து அச்சுறுத்தும் கட்டமைப்புகளை எதிர்த்து நிற்கவேண்டியிருக்கும்.

டிரம்ப்புக்கு விழுந்த அடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், மியாமியில் வாழும் பிரேசிலிய புலம்பெயர்ந்தோர் ஆகியோர் லூலாவைத்தோற்கடிக்கப் பெருமுயற்சி எடுத்தனர். தென் அமெரிக்க நிலப்பரப்பில் பாதியைக் கொண்டதும், லத்தீன் அமெரிக்காவின்மிகப்பெரிய பொருளாதாரமுமான பிரேசில், இன்று அமெரிக்கக் கண்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் தீவிர வலதுசாரி அரசுகளின் அலைக்கு எதிராகத் தனித்து நிற்கிறது. பிரேசில் தேர்தலில் வெளிநாட்டுத் தலையீடுநடந்தது இப்போது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. போட்டியின் முக்கிய கட்டத்தில் மெட்டா நிறுவனம் லூலாவின்கணக்குகளை முடக்கியதும், நிதி மற்றும் சமூக ஊடகத் தலையீடு குறித்த பிற தகவல்களும் இதற்குச் சான்று.2026 மார்ச்சில் மியாமியில் தொடங்கிய ‘அமெரிக்காக்களின் கேடயம்’ (Shield of the Americas) செயல்திட்டத்தை வலுப்படுத்த, பிரேசிலில் போல்சானரோ வெல்வார் என்று டிரம்ப் நம்பியிருந்தார். தங்கள் பாதுகாப்பை ஒருங்கி

ணைக்கும் நிறுவன வடிவம் என்று டிரம்ப் முன்வைத்த இது, உண்மையில் மக்கள் இயக்கங்களையும் இடது

சாரிகளையும் மூச்சுத்திணறச் செய்யும் ஏற்பாடு. லூலாவின் வெற்றி, மன்றோ கோட்பாட்டைச் செயல்

படுத்தும் டிரம்பின் பாதையை அடைத்துவிட்டது. பிரேசிலின் முக்கிய கனிம வளங்களை எளிதில் அணுகவும், அமேசான் டெல்டா படுகையில் புதிதாகக் கண்டறியப்பட்ட எண்ணெய் வளத்தின் மீது ஆதிக்கம் செலுத்தவும் அவரால் இனி முடியாது.

லூலா எதிர்கொண்ட பல தடைகளுக்கு மத்தியிலும் அவரது வெற்றி, தீவிர வலதுசாரிகள் வீழ்த்த முடியாதவர்கள் அல்லஎன்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளது.ஆங்கில மூலம்: பிரேக்த்ரூ நியூஸ் / குளோப்ட்ராட்டர்தமிழில் சுருக்கம் : எஸ்பிஆர்